தமிழகத்தில் ஒரேநாளில் 5,928 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று மட்டும் 96 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா, ஆந்திராவைத் தொடர்ந்து தமிழ்நாடு 3வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் இன்று (செப்டம்பர் 01) ஒரே நாளில் 5,928 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனால் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 4,33,969 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 1084 பேருக்கும், கோவையில் 581 பேருக்கும், செங்கல்பட்டில் 384 பேருக்கும், கடலூரில் 286 பேருக்கும் சேலத்தில் 335 பேருக்கும் ஒரேநாளில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 24 மணிநேரத்தில் சென்னையில் 22 பேர், சேலத்தில் 10 பேர் உட்பட மொத்தம் 96 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 7,418 ஆக அதிகரித்திருக்கிறது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற 6,031 பேர் இன்று மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மேலும் தமிழகத்தில் மொத்தம் 52,379 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் உத்தரப்பிரதேசங்களில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை, தமிழகத்தைவிட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க: பாஜகவில் இணைய வந்த பிரபல ரவுடி, காவல்துறையைக் கண்டதும் தப்பி ஓட்டம்