தமிழகத்தில் இன்று புதிதாக 4,807 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 88 பேர் கொரோனாவிற்கு பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா கட்டுக்கடங்காத வேகத்தில் பரவி, நாளுக்கு நாள் புதிய உச்சம் பெற்று வருகிறது. தினசரி பாதிப்பு தொடர்ந்து 4500ஐ கடந்து வருகிறது. பல்வேறு கட்ட ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட பின்பும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக 4807 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,65,714 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 1219 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு 84598 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இதுவரை இல்லாத அளவு இன்று மட்டும் 88 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2403 ஆக அதிகரித்துள்ளது. இதில் 24 பேர் தனியார் மருத்துவமனையிலும், 64 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் மட்டும் 31 பேர் பலியாகி உள்ளனர். சென்னையில் மொத்த பலி எண்ணிக்கை 1407 ஆக உள்ளது. மொத்தமாக மதுரையில் 147 பேர் பலியாகி உள்ளனர். திருவள்ளூரில் 154 பேரும், காஞ்சிபுரத்தில் 5 பேரும், தேனியில் 30 பேரும், ராமநாதபுரத்தில் 47 பேரும், வேலூரில் 25 பேரும் பலியாகி உள்ளனர்.
.
தமிழகத்தில் கடந்த நான்கு நாட்களாக தினமும் 60க்கும் மேற்பட்ட கொரோனா மரணங்கள் ஏற்பட்டுள்ளது, குறிப்பாக 40 வயதிற்கும் கீழ் உள்ளவர்கள் கொரோனாவால் உயிரிழப்பது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் வாசிக்க: தமிழகத்தில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா… 4,549 பேர் பாதிப்பு; 69 பேர் மரணம்