கொரோனா தடுப்பூசி கோவாக்சினை மனித உடம்பில் செலுத்தும் பரிசோதனை வெற்றிகரமாக தொடங்கியுள்ளது, யாருக்கும் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படவில்லை என்று ஹரியானா மாநில பாஜக சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜி தெரிவித்துள்ளது சர்ச்சையாகியுள்ளது.

கொரோனா வைரஸுக்கு தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மருத்துவ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனாவுக்கு எதிராக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டுள்ள கோவாக்சின் எனும் தடுப்பூசியை விரைவில் சந்தைக்கு கொண்டுவரும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் முதற்கட்டமாக, கோவாக்சின் தடுப்பூசியை மனித உடலில் செலுத்தி பரிசோதிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

மேலும் வாசிக்க: 2021.க்கு முன் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி வர வாய்ப்பில்லையா..

இதற்காக, நாடு முழுவதும் மொத்தம் 13 மருத்துவ கல்லூரிகளுக்கு, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (ICMR) அனுமதி அளித்துள்ளது. இவற்றில், ஹரியானா மாநிலத்தில் உள்ள பண்டித் பகவத் தயாள் சர்மா முதுநிலை மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனத்துக்கு கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இக்கல்வி நிறுவனத்தில், கோவாக்சின் தடுப்பூசியை மனித உடம்பில் செலுத்தும் பரிசோதனை இன்று (ஜூலை 18) மேற்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து ஹரியானா மாநில பாஜக சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜி தனது ட்விட்டர் பதிவில், “மூன்று பேருக்கு மேற்கொள்ளப்பட்ட இந்த பரிசோதனை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது என்றும், அவர்கள் யாருக்கும் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படவில்லை” எனவும் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசியின் மனித சோதனைகள் தொடக்கி 24 மணி நேரத்திற்குள் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படவில்லை, சகிப்புத்தன்மை இருப்பதாக யாரும் கூறுவதும் புகாரளிப்பதும் பொறுப்பற்றது. மிகப் பெரிய பதிப்பான கொரோனாவை எதிர்கொள்ள பரிசோதிக்கப்படும் தடுப்பூசி மாதிரி அளவு மருத்துவ ரீதியாக நீண்ட காலத்திற்கு ஆய்வு செய்ய வேண்டும். இந்நிலையில் பாஜகவை சேர்ந்த சுகாதாரத்துறை அமைச்சரே இவ்வாறு பொறுப்பில்லாமல் கூறியிருப்பதாக பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.