அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கோல்ஃப் விளையாட்டுப் பழக்கம், அந்நாட்டு மக்களின் வரிப்பணத்தை கணிசமாக காலி செய்திருப்பதாக அமெரிக்க வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நாட்டின் பல பகுதிகளில், டிரம்ப் கோல்ஃப் விளையாடுவதற்கான ஏற்பாடுகள் மற்றும் அவரின் பாதுகாப்பு செலவினங்களுக்காக, இதுவரை, அமெரிக்க மக்களின் வரிப்பணம் 102 மில்லியன் அமெரிக்க டாலர் செலவாகியுள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.
இச்செலவில், அமெரிக்காவின் பல பகுதிகள் மட்டுமின்றி, வெளிநாடுகளில் அதிபர் டிரம்ப் கோல்ஃப் விளையாடியதும் அடக்கம். இதுவரை டிரம்ப் கோல்ஃப் விளையாடியதற்கு புளோரிடாவில் 81 மில்லியன் அமெரிக்க டாலர்கள், நியூ ஜெர்ஸியில் 17 மில்லியன் அமெரிக்க டாலர்கள்,
லாஸ் ஏஞ்சலிஸில் 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள், ஸ்காட்லாந்தில் 3 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று செலவழிக்கப்பட்டதாக தெரிவிக்கின்றன அமெரிக்க வெள்ளை மாளிகை வட்டாரங்கள்.
தனது தேர்தல் பிரச்சாரத்தில், தான் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால், கோல்ஃப் விளையாட மாட்டேன் என்று டிரம்ப் வாக்குறுதி அளித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.