பாகிஸ்தான் இண்டெர்நேஷனல் ஏர்லைம்ஸ் விமானம் கராச்சியில் மக்கள் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் பயணிகள் அனைவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் சர்வதேச விமான சேவை நிறுவனத்துக்குச் சொந்தமான ஏ-320 என்ற பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானம் லாகூரிலிருந்து கராச்சிக்கு இன்று காலை புறப்பட்டது.

99 பயணிகள் மற்றும் 8 விமான ஊழியர்களுடன் லாகூரில் இருந்து கராச்சி சென்ற விமானம் கராச்சியில் உள்ள ஜின்னா சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே கட்டுப்பாட்டை இழந்து, மக்கள் குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இதில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இந்த விமான விபத்தைத் தொடர்ந்து கராச்சியில் பாகிஸ்தான் அரசு அவசர நிலையை அறிவித்துள்ளது. பாகிஸ்தான் மருத்துவமனைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி சிகிச்சை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியதால், இடிபாடுகளுக்கிடையே சிக்கியுள்ளவர்களை மீட்க இராணுவத்தினர் மற்றும் தீயணைப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து, தனது டிவிட்டர் பக்கத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வெளியிட்ட பதிவில், விமான விபத்தால் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். கராச்சிக்கு புறப்பட்ட பிஐஏ தலைமை நிர்வாக அதிகாரி அர்ஷத் மாலிக் மற்றும் மீட்பு மற்றும் நிவாரண குழுக்களுடன் தொடர்பில் இருக்கிறேன். உடனடி விசாரணை தொடங்கப்படும். இறந்தவரின் குடும்பங்களுக்கு பிரார்த்தனைகள் மற்றும் இரங்கல்கள் என தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக பாகிஸ்தானில் கடந்த ஒஇரண்டு மாதத்துக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானப் போக்குவரத்து கடந்த சில நாட்களுக்கு முன்புதான் மீண்டும் உள்நாட்டு விமானச் சேவை தொடங்கப்பட்டது. இந்நிலையில் இந்த விபத்து நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க: கொரோனா வைரஸ் உலக நாடுகளில் என்ன நடக்கிறது.. சுதந்திர விசாரணை நடத்த முடிவு