மகாராஷ்டிராவில் இருந்து வந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல போக்குவரத்து ஏற்பாடு செய்துதரக் கோரி , மத்திய பிரதேச எல்லையில் திடீரென போராட்டம் நடத்தி கல்வீச்சில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கொரோனா பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு , நாளை மறுநாளுடன் முடிவடைய உள்ள நிலையில், மேலும் கூடுதலான தளர்வுகளுடன் நீட்டிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
மேலும் வாசிக்க: 3 நிமிட வீடியோ காலில் 3,500 ஊழியர்கள் காலி- அதிர்ச்சியில் பிரபல நிறுவன ஊழியர்கள்
இந்நிலையில் பல்வேறு மாநிலங்களில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப பல்வேறு இடர்பாடுகளை சந்தித்து வருகின்றனர். மத்திய அரசு அனுமதித்த சிறப்பு ரயில்களில் செல்ல இயலாமல், ஆயிரக்கணக்கான தொழிலார்கள் தங்கள் குடும்பங்களுடன் நடைபயணமாக இன்று வரை சென்று கொண்டிருக்கிறார்கள்.
இப்படி செல்லும் வழியில் விபத்துகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையோ ஏராளம். நேற்று முன்தினம் ஒரே நாளில் 14 இடம்பெயர் தொழிலாளர்கள் விபத்தில் சிக்கி பலியாகினர். அதேநேரத்தில் தங்களது மாநில அரசு ஏதாவது நடவடிக்கை எடுக்காதா.. என பிற மாநிலங்களில் தவித்தும் வருகின்றனர்.
மகராஷ்டிரா மாநிலத்தில் இருந்து மத்திய பிரதேச மாநிலத்துக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் திரும்புகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் நடைபயணமாகவே மகாராஷ்டிராவை விட்டு புறப்பட்டு மத்திய பிரதேசத்தை சென்றடைகின்றனர்.
அனைவரும் மத்திய பிரதேச எல்லையான பார்வானியில் தடுத்து நிறுத்தப்படுகின்றனர். அப்படி தடுத்து நிறுத்தப்பட்ட தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க மாநில அரசு தாமதம் செய்கிறது என புகார் தெரிவித்தனர். இவர்கள் ஒருகட்டத்திற்குமேல் ஆவேசமடைந்து நேற்று போலீசார் மற்றும் அதிகாரிகள் மீது கல்வீசித் தாக்கினர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவானது.
மேலும் வாசிக்க: ‘சுய சார்பு பாரதம்’- மோடியின் பலே திட்டங்கள்: விளக்கும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
மேலும் தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளில் தாமதம் ஏற்பட்டதால் தான் இந்த பிரச்சனை உருவானதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அங்கு பதற்றமான நிலைமை உருவானது. இதனையடுத்து பார்வானி மாவட்ட ஆட்சியர் அமித் தோமர், நாங்கள் அவர்களுக்காக பேருந்துகளை ஏற்பாடு செய்கிறோம், என்று தெரிவித்துள்ளார்.