கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட இழப்பை சரிசெய்ய உபர் நிறுவனம் தனது ஊழியர்கள் 3,500 பேரை பணி நீக்கம் செய்துள்ளது.

கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் முடங்கியுள்ள சூழலில், சிறு, குறு நிறுவனங்கள் முதல் கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை அனைத்து துறைகளைச் சார்ந்த பல்வேறு தொழில் நிறுவனங்களும் இழப்பை சந்தித்துள்ளன. இதனால் தனியார் நிறுவனங்கள் நிதி நெருக்கடியை சமாளிக்க சம்பள குறைப்பு மற்றும் ஆட்குறைப்பில் ஈடுபட்டு வருகின்றன.

அந்தவகையில் பிரபல கால்டாக்சி நிறுவனமான உபர் நிறுவனம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யப்போவதாக கடந்த வாரமே அறிவித்திருந்திருந்தது.

இதனையடுத்து மூன்றே நிமிட வீடியோ காலில் 3,500 வாடிக்கையாளர் சேவை பிரிவில் உள்ள ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. இது அந்நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் 14% சதவீதம் ஆகும்.

மேலும் வாசிக்க: ‘சுய சார்பு பாரதம்’- மோடியின் பலே திட்டங்கள்: விளக்கும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

இது குறித்து வீடியோ கால் மூலம் பேசிய உபர் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை தலைமை அதிகாரி ருவ்வின், “கொரோனா பேரிடரை சமாளிக்காவுக், இழப்பிட்டை சரி செய்யவும் உபர் நிறுவனம் சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

அதன்படி எடுக்கப்பட்ட முதற்கட்ட நடவடிக்கையாக இதுவே உங்களது கடைசி வேலை நாள். இந்நிறுவனத்தில் இனி உங்கள் அனைவருக்கான வேலை இல்லை. மேலும் சில முக்கிய அதிகாரிகள் தனது அடிப்படை ஊதியத்தை பெறப்போவதில்லை” எனவும் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் ஏற்பட்ட இழப்பை சரிசெய்ய இன்னும் சில நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், உபர் நிறுவனத்தின் இந்த செயல் பல்வேறு நிறுவன ஊழியர்களையும் கலக்கம் அடைய செய்துள்ளது.