டெல்லியில் கட்டப்பட்டு வரும் புதிய நாடாளுமன்றம் உள்ளடங்கிய சென்ட்ரல் விஸ்டா கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்க மறுத்து, மனுதாரருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக மோசமான பரவி வரக்கூடிய நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடம் மற்றும் அதைச்சுற்றி அமைக்கப்படும் அரசு அலுவலங்கள், பிரதமர் இல்லம் ஆகியவை உள்ளடக்கிய சென்ட்ரல் விஸ்டா கட்டுமான பணிகளுக்கு தற்காலிக தடை விதிக்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
[su_image_carousel source=”media: 23952,23953″ crop=”none” captions=”yes” autoplay=”3″ image_size=”full”]
இரண்டு வாரங்களுக்கு முன் இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், தீர்ப்பிணை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்த நிலையில், இந்த வழக்கில் இன்று (31-5-2021) தீர்ப்பு வழங்கப்பட்டது.
அந்த தீர்ப்பில், சென்ட்ரல் விஸ்டா கட்டுமானப் பணி தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது, அத்தியாவசியமானது எனக் கூறி, கட்டுமானப் பணிகளுக்கு தடை விதிக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
அத்துடன், பொதுநல நோக்கத்துடன் மனுதாரர்கள் வழக்கு தொடரவில்லை எனத் தெரிவித்த நீதிமன்றம், வழக்கு தொடர்ந்த மனுதாரர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.
ஒன்றிய அரசு தான் மாநிலங்களுக்கு தடுப்பூசியை வழங்க வேண்டும்- உச்சநீதிமன்றம் அதிரடி