பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள SK16 படத்தில் இரண்டு பிரபல இயக்குனர்கள், நடிகர்கள் இணைந்திருக்கிறார்கள்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார். இது சிவகார்த்திகேயனின் 16-வது படமாகும். இப்படத்தின் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்களை சன்பிக்சர்ஸ் நிறுவனம் கடந்த இரு நாட்களாக  வெளிவிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இப்படத்தில் இசையமைப்பாளர் இமான், நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், அனு இம்மானுவேல், காமெடி நடிகர்கள் சூரி, யோகிபாபு, ஆகியோர் இணைந்திருப்பதாக அறிவித்திருந்தார்கள். தற்போது நடிகர்கள் நட்டி நட்ராஜும், ஆர்.கே.சுரேஷும் இணைந்திருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.

மேலும் இப்படத்தில் புதிதாக இணைந்தவர்கள் இரண்டு பிரபல இயக்குனர்கள். இயக்குனர் இமயம் பாரதிராஜா, மற்றொருவர் இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி. இந்த இருவரின் இணைப்பால் படத்தின் எதிர்பார்ப்பு உச்சத்தை அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

SK16 படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா அவர்களும் படத்தொகுப்பாளராக அந்தோணியும் இணைந்துள்ளனர். மேலும் இந்த படத்தின் கலை இயக்குனராக வீரமசர் என்பவர் இணைந்துள்ளார்.