சீமராஜா படத்தை அடுத்த நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் படம் “மிஸ்டர் லோக்கல்”. எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் இரண்டாவது முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

மேலும் இப்படத்தில் ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ள இப்படத்தை, ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். கோடை விடுமுறையை ஒட்டி இப்படம் திரைக்குவர உள்ளது.

ராஜேஷ் படம் என்றாலே காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். எனவே இப்படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில், கடந்த 6ம் தேதி நயன்தாராவின் காட்சிகள் படமாக்கப்பட்டன.

இந்நிலையில் நயன்தாரா, கடைசி நாள் படப்பிடிப்பின் போது படக்குழுவினருக்கு வாட்ச் பரிசளித்து அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. ஆனால், இப்படத்தின் தலைப்பும், ஏற்கனவே தெலுங்கில் நானி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ‘நேனு லோக்கல்’ படத்தின் தலைப்பும் ஒத்துபோகிறது. எனவே மிஸ்டர் லோக்கல் படத்தின் கதையும் இதுவும் ஒன்றோ என சமூக வலைத்தளங்களில் சர்ச்சைகள் எழுந்துள்ளது.