சொத்து குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் இயற்பெயரான கோமளவல்லி பெயரில் வில்லி பாத்திரம் வடிமைத்து அதில் அதிமுக வை கேலி செய்யும் விதமா விஜய் நடித்து வெளி வந்து இருக்கும் சர்க்கார் படம் பல்வேறு சர்ச்சயில் சிக்கி உள்ளது

சர்கார் படத்தில் இடம்பெற்றுள்ள அரசியல் காட்சிகளை நீக்க வலியுறுத்தி சென்னை காசி திரையரங்கம் முன்பும் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர் .

மேலும் அதிமுகவினர் திரையரங்கம் முன் வைக்கப்பட்டிருந்த பேனர்களை கிழித்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் சர்கார்  திரைப்படத்தின் பேனரை கிழித்த அதிமுகவினருக்கு விஜய் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் ராஜேஸ்வரி திரையரங்கில் சர்கார் பட பேனரை அதிமுகவினர் கிழித்தனர். பேனரை கிழித்த அதிமுகவினரை கைது செய்ய வலியுறுத்தி விஜய் ரசிகர்கள் போராட்டத்தின் ஈடுபட்டனர். மேலும் தற்போது அங்கங்கே உள்ள விஜய் ரசிகர்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் சர்கார் திரைப்படத்திற்க்கு எதிராக அதிமுகவை சேர்ந்தவர்கள் அராஜகத்தில் இட்டுவிடுவதாக விஜய் ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் சர்க்கார் படம் ஓடும் மூன்று திரையரங்குகளின் முன்பு வைக்கப்பட்டிருந்த 20-க்கும் மேற்பட்ட விஜய் பேனர்களை இரவோடு இரவாக மர்ம நபர்கள் கிழித்துள்ளனர். இதனால் வேதனையடைந்த விஜய் ரசிகர்கள் திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

மதுரையில் சர்கார் படம் ஓடும் திரையரங்கு முன்பு அதிமுகவினர் திடீரெனெ போராட்டத்தில் ஈடுபட்டனர். சர்கார் திரைப்படத்தில் ஜெயலலிதாவின் இலவச திட்டங்களை விமர்சிக்கும் காட்சிகள் இருப்பதாக கூறி, அதிமுக-வினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக, மதுரையில் சர்கார் படம் ஓடும் திரையரங்கம் முன்பு அதிமுகவினர் திரண்டுஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சர்கார் திரைப்படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இல்லாவிட்டால் சர்கார் படம் ஓடும் அனைத்து திரையரங்குகள் முன்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதனால் மதுரை அண்ணாநகரில் சினிபிரியா தியேட்டர் முன் அதிமுகவினர் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து சினிபிரியா, மினிபிரியா, சுகப்பிரியா திரையரங்குகளில் சர்கார் படத்தின்  பிற்பகல் காட்சி ரத்து செய்யப்பட்டது.

மேலும் மதுரையில் அதிமுகவினர் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து திருச்சியில் சர்கார் திரைப்படம் திரையிடப்பட்டுள்ள 7 திரையரங்குகளுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது.