தெலுங்கு சினிமாவில் பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா, தற்போது கொரோனா வைரஸ் பற்றி ஒரு முழு திரைப்படத்தை, கொரோனா ஊரடங்கில் முழுமையாக இயக்கி உள்ளார்.

“கொரோனா வைரஸ்” என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் ட்ரைலரை தற்போது அவர் வெளியிட்டுள்ளார். ஊரடங்கில் இருக்கும் ஒரு குடும்பத்தை பற்றித்தான் முழு படமும் இருக்கிறது. தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கும் ஒரு குடும்பத்தினர், அதில் ஒரு பெண்ணுக்கு மட்டும் சளி, இருமல் இருக்கிறது. அது கொரோனாவா என மொத்த குடும்பமும் பயத்தில் இருக்கும் நிலையில் என்ன செய்கிறது என்பது பற்றியது தான் இந்த படம்.

இதுபற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராம் கோபால் வர்மா, “கொரோனா வைரஸ் ஹாரர் படம் இல்லை. அது நம் மனதுக்கு உள்ளே இருக்கும் பயத்தை பற்றியது. சிறந்த அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் நமக்கு தெரிந்த அளவிலான விஷயங்கள் மட்டுமே தெரியும். உண்மையில் எதுவுமே தெரியாது. எனக்கு தெரிந்த ஒரே விஷயம், எனக்கு எதுவும் தெரியாது என்பது தான் – சாக்ரடீஸ்” என கூறி உள்ளார்.

[su_youtube url=”https://www.youtube.com/watch?v=D3EdI6G2tF4″ width=”700″ autoplay=”yes” title=”ராம் கோபால் வர்மாவின் ‘கொரோனா வைரஸ்’ ட்ரைலர்”]

மேலும் வாசிக்க: களைகட்டும் அமேசான் பிரைம்- தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியீடு

கொரோனா வைரஸ் படத்தின் ட்ரெய்லரை பார்த்துவிட்டு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ட்விட்டரில் பாராட்டியுள்ளார். அதில், இந்த ராம் கோபால் வர்மாவை அடக்க முடியாது. பலருக்கு ‘ராமு’.. ஆனால் எனக்கு ‘சர்க்கார்’.. அவர் ஊரடங்கில் இருக்கும் ஒரு குடும்பத்தை பற்றி ஒரு முழு படத்தையும் இயக்கியுள்ளார். அதுவும் ஊரடங்கில் தான் படமாக்கியுள்ளார். கொரோனா வைரஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த படம், இந்த வைரஸ் பற்றி உருவாக்கப்பட்டுள்ள முதல் படம். இதுதான் ட்ரைலர்” என குறிப்பிட்டு ட்ரைலரை பகிர்ந்துள்ளார் அமிதாப் பச்சன்.

அதற்கு நன்றி கூறியுள்ள ராம் கோபால் வர்மா, ‘நன்றி சார்.. இந்த சுங்கோ முங்கோ வைரஸ் என்னை லாக்டவுன் செய்ய விடமாட்டேன்’ என தெரிவித்துள்ளார். ஊரடங்கால் படப்பிடிப்பை நடத்தினாலும் தான் அரசின் விதிமுறைகள் அனைத்தையும் பின்பற்றியதாக தெரிவித்துள்ளார் ராம் கோபால் வர்மா.