பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். அதையடுத்து, ப்யார் பிரேமா காதல் என்ற படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார். இந்நிலையில், புரியாத புதிர் புகழ் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் “இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்”.

இப்படம் வரும் மார்ச் மாதம் 15ம் தேதி வெளியாகவுள்ளது என ஹரிஷ் கல்யாண் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்த வீடியோ ஒன்றையும் ஹரிஷ் கல்யாண் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

பியார் பிரேமா காதல் படத்தை அடுத்து ஹரிஷ் கல்யாண் நடித்திருக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ளார். மேலும் விஜய் டிவி புகழ் மாகாபா ஆனந்த், பாலா சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசை அமைத்துள்ளார்.

இப்படம் குறித்து இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி கூறுகையில், ராஜா கிழிந்த ஜீன்ஸ் போட்டுக்கொண்டு, வீட்டிலும், தெருவிலும் இருப்பது போன்றும், அதோடு விலையுயர்ந்த கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டும் இருப்பார். மேலும், ஒரு பிடிவாதக்கார ஹீரோவின் காதல் தான் இப்படம் என்று கூறியுள்ளார். இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் பைக்கராகவும், பாக்‌ஷராகவும் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது.