கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு காரணமாக திரையரங்குகளும் இயங்காததால் படங்கள் வெளியாவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. திரையரங்குகளில் படங்கள் வெளியாவது தாமதமாகி வருவதால் நேரடியாக ஓடிடி தளங்களில் படங்களை வெளியிடத் தயாரிப்பாளர்கள் முயன்று வருகிறார்கள்.

அமிதாப் பச்சன், ஆயுஷ்மன் குரானா நடிப்பில் ஷூஜித் சிர்கார் இயக்கத்தில் உருவான குலாபோ சிதாபோ (Gulabo Sitabo) படம் நேரடியாக அமேசான் பிரைமில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் 12 முதல் அமேசானில் குலாபோ சிதாபோ வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் டிரெய்லருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. யூடியூப் டிரெண்டிங்கில் முன்னணியில் உள்ள குலாபோ சிதாபோ, அமேசான் பிரைமில் படம் வெளியாகும்போது சிறப்பான வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

[su_youtube url=”https://www.youtube.com/watch?v=o0qeQ_yHqtA” width=”700″ autoplay=”yes” title=”குலாபோ சிதாபோ ட்ரைலர்”]

மேலும் வாசிக்க: விகடன் குழுமத்தின் 176 பேர் பணிநீக்கம் எதிரொலி- விருதை திருப்பி அனுப்பிய இயக்குனர் லெனின் பாரதி