Article 15 படத்தின் தமிழ் ரீமேக்கில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கிறார். போனி கபூர் அதை தயாரிக்க,அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார்.

சிவகார்த்திகேயன் தயாரித்த கனா படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆனவர் அருண்ராஜா காமராஜ். அடுத்ததாக ஹிந்தியில் சூப்பர்ஹிட் ஆன Article 15 படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்கவுள்ளார் என தற்போது தகவல் வெளிவந்துள்ளது.

ஆயுஷ்மான் குரானா நடித்திருந்த இந்த படத்தில் கிராமப்புறங்களில் ஜாதி வன்முறைகள் அதிகம் நடப்பது பற்றி காட்டப்பட்டு இருக்கும். ஜூன் 28, 2019ல் ரிலீஸ் ஆன இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. வசூல் ரீதியாகவும் சாதித்தது Article 15.

இதன் தமிழ் ரீமேக்கில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக, ஆயுஷ்மான் நடித்த போலீஸ் அதிகாரி ரோலில் நடிக்கவுள்ளார். உதயநிதி ஸ்டாலின், மிஷ்கின் இயக்கத்தில் அவர் நடித்த சைக்கோ படம் வெற்றி பெற்றது. அடுத்து ஏஞ்சல், கண்ணை நம்பாதே ஆகிய இரண்டு படங்களை கைவசம் வைத்துள்ளார். தற்போது ஆர்டிகள் 15 படத்தின் ரீமேக்கில் அவர் ஒப்பந்தமாகி இருப்பது எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

மேலும் வாசிக்க: சூர்யா வெளியிட்ட ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரைலர்.. அமேசான் ப்ரைமில் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு

அதேபோல் அஜித்தின் வலிமை படத்தினை தயாரித்து வரும் போனி கபூர் தான் இந்த படத்தினையும் தயாரிக்கவுள்ளார். இப்படத்தின் ப்ரீ – ப்ரொடக்ஷன் பணிகள் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றது போல கதையில் சில மாற்றங்களை அருண்ராஜா செய்யவுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கனா படத்திற்கு பிறகு அருண்ராஜா காமராஜா பாடல் வரிகள் எழுதுவதில் அதிகம் கவனம் செலுத்தி வந்தார். அசுரன் படத்தில் வரும் “வா அசுர வா..” என்ற பாடலுக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது.

அதன் பிறகு தர்பார் படத்தில் கண்ணுள் திமிரு பாடலுக்கும், விஜய்யின் மாஸ்டர் படத்தில் குட்டி ஸ்டோரி பாடலுக்கும் லிரிக்ஸ் எழுதி இருந்தார். விஜய் தன் சொந்த குரலில் பாடிய அந்த பாடல் மிகப்பெரிய ஹிட் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.