கொரோனா பரவல் முற்றிலும் இயற்கையாக நடந்த ஒன்று என அமெரிக்க தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் அந்தோனி பௌசி தெரிவித்துள்ளார்.

சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆரம்ப நிலையில், இந்த வைரஸ் வௌவால்கள் மூலம் வேறு விலங்கிற்கு பரவி அதன் மூலம் மனிதர்களுக்கு பரவி இருக்கலாம் என்றும், இது சீனாவின் வுஹான் நகரில் உள்ள விலங்கு சந்தை மூலமாக மனிதர்களிடையே பரவியதாகவும் கூறப்பட்டது.

ஆனால் இந்த வைரஸ் சீனாவிலுள்ள வுஹான் ஆய்வுக்கூடத்தில் இருந்துதான் சீனாவால் உருவாக்கப்பட்டது கசிந்தது என அதிபர் டிரம்ப் தொடர்ந்து சீனா மீது குற்றம் சாட்டி வருகிறார்.

மேலும் வாசிக்க: சர்வதேச விசாரணை அதிகாரிகளை எங்கள் நாட்டிற்குள் அனுமதிக்க மாட்டோம்- சீனா பிடிவாதம்

இந்நிலையில் அமெரிக்க தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் அந்தோனி பௌசி செய்தியாளர்களிடம் பேசுகையில்,வௌவால்களின் உடல்களில் உருவாகும் வைரஸ்களின் பரிமாணத்தை பார்க்கும்போது இந்த கொரோனா வைரஸ் ஆய்வகத்தில் வடிவமைக்கப்படுவதற்கு வாய்ப்பே இல்லை என்று தோன்றுகிறது.

இந்த கொரோனா பரவல் முற்றிலும் இயற்கையாக நடந்த ஒன்று, இதற்கு ஆதாரமாக ஏராளமான பரிணாம வளர்ச்சியை உயிரியலாளர்கள் உறுதி செய்துள்ளனர் என தெரிவித்துள்ளார். மேலும் இந்த வைரஸின் தாக்கம் எத்தனை ஆண்டு காலம் உலகில் நீடிக்கும் என்று கேட்ட கேள்விக்கு, அதுகுறித்து இப்போதைக்கு கருத்து தெரிவிக்க முடியாது என்றும் டாக்டர் அந்தோனி பௌசி கூறியுள்ளார்.

மேலும் வாசிக்க: மோடியின் அரசை புறக்கணிக்கிறதா அமெரிக்கா..