ஓய்வு பெறும் வயதை அதிகரித்ததற்கு எதிராக நாளை தமிழக அரசை கண்டித்து அரசு ஊழியர்கள் சங்கம் போராட்டம் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி அமைப்புகளில் பணியாற்றி வருவோரின் ஓய்வு வயது 58 என்பதை 59 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு ஊழியர் சங்கம் இந்த உத்தரவை எதிர்த்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த நடவடிக்கையானது எந்தவகையிலும் மாநில அரசின் நிதி நிலையினை மேம்படுத்தாது என்பதோடு மட்டுமல்லாமல், ஓராண்டிற்கு அரசுப் பணியாளர்களுக்கு கிடைக்கவேண்டிய ஓய்வு பலன்களை தள்ளிப் போடுவதற்கான நடவடிக்கையாக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

எடுக்கப்படாமல் இருக்கக்கூடிய விடுப்பை கணக்கிட்டு அந்த நிதி பலன் ஆண்டின் இறுதி காலத்தில் வழங்கப்படும். ஆனால் கொரோனா பிரச்சனையை காரணம் காட்டி அது இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதை நாங்கள் கண்டிக்கிறோம்.

மேலும் வாசிக்க: எடப்பாடி பழனிசாமி இல்லம் நோக்கி, 5 சிறுவர்கள் நடைப்பயண போராட்டத்தால் பரபரப்பு

மேலும் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பதன் மூலம் பதவி உயர்வுக்காக காத்திருப்போர் மற்றொரு ஆண்டு கூடுதலாக காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்காது. இதற்கான எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக, நாளை அனைத்து அரசு அலுவலகங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த உள்ளோம்.

இப்போராட்டத்தின்போது தனிமனித இடைவெளி கடைபிடிக்கப்பட்டு, பாதுகாப்பு எச்சரிக்கையுடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று அறிக்கப்பட்டுள்ளது.