பாடகி சின்மயி #MeToo மூலம் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டுகளை வைத்தார். அதைத் தொடர்ந்து பலரும் வைரமுத்து மீது குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றனர்.

#MeToo கவிஞர் வைரமுத்து மட்டுமின்றி பல பிரபலங்கள் மீதும் மூலமாக பெண்கள் தங்களது பாலியல் தொல்லைகள் குறித்து பதிவிட்டு, இந்தியா முழுவதும் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சமீபத்தில் பேசிய பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா, “மத்திய அமைச்சராக இருந்த எம்.ஜே அக்பர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து, அவர் தனது பதவியை ராஜினாமா செய்து, புகார் கூறியவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்.

அதே போல் வைரமுத்து அவர்களும், தன் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டுகள் பொய் என்றால் நான் கூறும் ஆலோசனையை கேளுங்கள் எனக் கூறி, வைரமுத்துவிற்கு வழங்கப்பட்ட தேசிய விருதுகளை திரும்ப கொடுத்துவிட்டு, வழக்கு தொடர்வது தான் சிறந்தது” என தெரிவித்துள்ளார்.

பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனுமதிக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பை கண்டித்து சத்ய பிரமாணம் ஏற்கும் கூட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. இதில் பாஜகவின் மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேசிய செயலாளர் எச்.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் பேசியதாவது, ஆண்டாள் பற்றி பேசியதால், வைரமுத்து பிரச்னைகளை எதிர் கொண்டு வருகிறார். ஆண்டாளை பழித்த கவிஞருக்கு, மற்றொரு பெண் வடிவத்தின் மூலம் ஆண்டாள் பாடம் புகட்டுவதாக கூறியது குறிப்பிடத்தக்கது.