பிரதமர் நரேந்திர மோடி, மன் கி பாத் என்ற வானொலி நிகழ்ச்சியின் வாயிலாக மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதுடன், மக்களுடன் கலந்துரையாடுகிறார்.

அந்தவகையில் மே மாதத்திற்கான மன் கி பாத் வானொலி நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது, “பேரழிவுகள் ஏற்பட்டுள்ள இந்த காலகட்டத்தில், புயலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் மக்கள் தைரியத்தை வெளிப்படுத்தினர். பொறுமை மற்றும் கட்டுப்பாடுடன் போராடினர்.

நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் தீவிரமாக பங்கேற்றவர்களின் முயற்சிகளை மனதார பாராட்டுகிறேன். அவர்கள் அனைவருக்கும் வணக்கம் செலுத்துகிறேன். புயலால் தங்கள் உற்றார் உறவினரை இழந்துவாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கொரோனாவுக்கு எதிரான போரில் நமது ஆயுதத்தை கீழிறக்க கூடாது. இரண்டாவது அலையை முறியடிப்போம். சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், முகக்கவசம் அணிதல் ஆகியவற்றை தடுப்பூசி செலுத்திய பிறகும் மக்கள் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். வெற்றிக்கான ஒரே வழி இதுதான்.

கொரோனாவின் தொடக்கத்தில் நாட்டில் ஒரே ஒரு சோதனை ஆய்வகம் மட்டுமே இருந்தது. ஆனால், இன்று 2500க்கும் மேற்பட்ட ஆய்வகங்கள் செயல்படுகின்றன. ஆரம்பத்தில் ஒருநாளில் சில நூறு சோதனைகள் மட்டுமே செய்ய முடிந்தது. இப்போது ஒரு நாளில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட சோதனைகள் நடத்தப்படுகின்றன.

[su_image_carousel source=”media: 23847,23846″ crop=”none” captions=”yes” autoplay=”3″ image_size=”full”]

கோவிட் -19 காலங்களில் இந்தியாவின் கடின உழைப்பாளி விவசாயிகள்தான். தேசத்திற்கு உணவளிப்பதில் அவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். தொற்றுநோய் இருந்தபோதிலும் விவசாயிகள் உற்பத்தியில் சாதனை படைத்துள்ளனர்.

பீகாரின் ‘லிச்சி’ பழத்துக்கு அதன் அடையாளத்தை வலுப்படுத்தவும், விவசாயிகளுக்கு அதிக நன்மைகள் கிடைக்க வேண்டும் என்றும் அரசாங்கம் அதற்கு புவிசார் குறியீடு வழங்கியது.

சாதாரண காலங்களில், திரவ மருத்துவ ஆக்ஸிஜனின் தினசரி உற்பத்தி 900 மெட்ரிக் டன். இப்போது, ​​இது ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 9,500 மெட்ரிக் டன் வரை 10 மடங்கு அதிகரித்துள்ளது. திடீரென ஏற்பட்ட ஆக்சிஜன் தேவையை சமாளிக்க ‘ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்’ ரயில்கள் நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் ஆக்ஸிஜனை மிக விரைவாகவும் அதிக அளவிலும் கொண்டு சென்று ரயில்வே உதவி வருகிறது என கூறியுள்ளார்.

மேலும் பேசிய பிரதமர் மோடி, கடந்த 7 ஆண்டுகளில் இந்தியா மிகவும் வேகமாக முன்னேறி வருகிறது. இந்த முன்னேற்றம் கொரோனா காலத்தில் அதனை எதிர்கொள்ள பெரும் பலனை அளித்துள்ளது. 7 ஆண்டுகளை நிறைவு செய்யும் எனது தலைமையிலான அரசு அனைத்து மக்களுக்கான அரசாக செயல்படுகிறது.

எங்கள் ஆட்சிக்காலத்தில் மக்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். சுகாதாரமான குடிநீர், வீடு, மின்சாரம் என அனைத்தும் கிடைப்பதால் அவர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் பிரதமர் மோடியின் இன்றைய மன் கி பாத் உரையை விமர்சித்துள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. இதுகுறித்து ராகுல் காந்தி தனது பதிவில், கொரோனாவுக்கு எதிராக போராட சரியான நோக்கம், கொள்கை, உறுதிப்பாடு ஆகியவை தேவை. மாதத்திற்கு ஒரு முறை அர்த்தமற்ற வகையில் பேசுவது எந்த வகையிலும் உதவாது” என்று பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடியின் தொடர் பழிவாங்கும் நடவடிக்கை; முதல்வர் மம்தா உருக்கமான பேச்சு