தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததை தொடர்ந்து இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் முழு ஊரடங்கு வந்து விடுமோ என்ற அச்சத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக சொந்த ஊர் செல்ல படையெடுப்பதால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் நிரம்பி வழிகிறது.
நாட்டில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்திலும், தமிழகம் 4வது இடத்திலும் உள்ளது. தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 11 ஆயிரத்தை எட்டியுள்ளது. ஒருநாள் கொரொனா மரணங்கள் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது.
இதனையடுத்து தமிழகத்தில் இன்று முதல் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை (இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை) இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இரவு நேர ஊரடங்கின் போது, வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு இடையேயான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து, வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படாது.
எனினும், அவசர மருத்துவத் தேவைகளுக்கும், அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிக்கை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், சரக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள் இரவு நேர ஊரடங்கின் போது அனுமதிக்கப்படும்.
மேலும் தமிழகம் முழுவதும் உள்ள உள்ள அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் இன்று முதல் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் முழு ஊரடங்கு உத்தரவு எந்த நேரத்திலும் வந்து விடுமோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. குறிப்பாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் என்ன செய்வது என்ற அச்சத்தில் உள்ளனர் புலம்பெயர் தொழிலாளர்கள்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தவறிய பிரதமர்; தேசிய அளவில் டிரெண்டான #ResignModi
தமிழகத்தில் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். உத்தரப்பிரதேசம், பீகார், ஒடிசா, மேற்கு வங்காளம் உத்தரகாண்ட், அசாம் போன்ற மாநிலங்களில் இருந்துதான் பெருவாரியான தொழிலாளர்கள் தமிழகத்திற்கு வந்து வேலை செய்கின்றனர்.
கடந்த ஆண்டு பிரதமர் மோடி அறிவித்த திடீர் ஊரடங்கால் பலர் உணவுக்கு வழியில்லாமல் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள். தற்போது டெல்லியில் ஒருவாரம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் திரும்பி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால், புலம்பெயர் தொழிலாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். வேலை செய்யும் இடங்களில் இருந்து கூட்டம் கூட்டமாக சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர்.
[su_image_carousel source=”media: 22943,22944″ crop=”none” captions=”yes” autoplay=”2″ image_size=”full”]
இதனால் சென்னை சென்ட்ரலில் இருந்து வடமாநிலங்களுக்குச் செல்லும் ரயில்கள் நிரம்பி வழிகின்றன. அடுத்த ரயிலுக்காக காத்திருப்பவர்களால் சென்னை ரயில் நிலையம் நிரம்பி வழிகிறது. இதேபோல், கோவை திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொழிற்சாலைகள், உணவகங்களில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல ரயில் நிலையங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து புலம்பெயர் தொழிலாளர்கள் கூறுகையில், கடந்த ஆண்டை போல் திடீரென முழுஊரடங்கு அறிவிக்கப்பட்டால், வேலை வாய்ப்பை இழந்து உண்ண உணவின்றி ஊர் திரும்ப போக்குவரத்து இன்றி பாதிக்கப்பட நேரிடும் என்ற அச்சத்தால் தங்களது சொந்த ஊர் செல்வதாக தெரிவித்துள்ளனர்.
தீவிரமாக பரவும் கொரோனா 2வது அலையின் புதிய அறிகுறிகள்: எச்சரிக்கும் மருத்துவர்கள்