கடந்தாண்டு நிலவரப்படி நாடு முழுவதும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிகம் படித்த கைதிகளின் விவரங்களை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ளது அதன்படி சில முக்கிய புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியை தந்துள்ளது . 10 லட்சம் வாசகர்கலை பெற்ற உங்கள் இரு மொழி தமிழ் ஸ்பெகோ பெற்ற தகவல்களை உங்களுடன் பகிருகிறது
இந்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 3 லட்சத்து 30 ஆயிரத்து 487 கைதிகளில், 1.67 சதவீதம் பேர் முதுகலை பட்டதாரிகள், 1.2 சதவீதம் பேர் இன்ஜினியர்கள்.
நாடு முழுவதும் உள்ள பல்வேறு சிறைகளில் உள்ள 3,740 கைதிகள் தொழில்நுட்ப பட்டப்படிப்பு முடித்தவர்கள். இந்த படித்த கைதிகள் அனைவரும் பெரும்பாலும் வரதட்சணை கொடுமையால் மனைவி இறந்தது, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட குற்றங்களுக்காக தண்டனை பெற்றுள்ளனர். சிலர் பொருளாதார குற்றங்களுக்காக தண்டனை பெற்றுள்ளனர்.
இவர்களில் 727 பேர் அல்லது 20 சதவீதம் பேர் உத்தரப் பிரதேச சிறைகளில் உள்ளனர். அதவாது கைது செய்யப்பட்ட தொழில்நுட்ப பட்டப்படிப்பு முடித்தவர்களில் 20% உத்திரபிரதேச சிறைகளின் .. மேலும் அடுத்து வருவது மகாராஷ்டிராவில் 495 பேரும், கர்நாடகாவில் 362 கைதிகளும் தொழில்நுட்ப பட்டம் பெற்றவர்கள்.
இது மட்டுமின்றி, உத்தரப் பிரதேச சிறை கைதிகளில் பெரும்பாலானோர் முதுகலை பட்டம் பெற்றவர்கள் என அதிச்சியான் தகவலும் வெளிவந்துள்லது
நாடு முழுவதும் உள்ள சிறைகளில் முதுகலை பட்டப்படிப்பு முடித்த 5,282 கைதிகள் உள்ளனர். இதில், 2010 பேர் உத்தரப் பிரதேச சிறைகளில் உள்ளனர். அதவாது கைது செய்யப்பட்ட தொழில்நுட்ப பட்டப்படிப்பு முடித்தவர்களில் 38 % உத்திரபிரதேச சிறைகளின் ..
எஸ்.வி.சேகருக்கு சிறைக்கு செல்ல ஆசையாக இருந்தால் அரசு நிறைவேற்றும்… அதிமுக அமைச்சர்