குழந்தைகள் கடத்தல் விவகாரத்தில் மதுரை இதயம் அறக்கட்டளையை சேர்ந்த 7 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தலைமறைவான அதன் நிறுவனர் மற்றும் உதவியாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மதுரை ஆயுதப்படை மைதான வளாகத்தில் செயல்பட்ட இதயம் அறக்கட்டளையின் ஆதரவற்றோர் காப்பகத்தில் இருந்து கடந்த 29 ஆம் தேதி இரு குழந்தைகள் (1 வயது ஆண் குழந்தை, 2 வயது பெண் குழந்தை) சட்டவிரோதமாக 2 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டனர்.

இதுகுறித்து எழுந்த புகாரில் 2 குழந்தைகளையும் முறைகேடாக தத்து எடுத்த இரண்டு தம்பதியர், இரு புரோக்கர்கள், இல்ல ஒருங்கிணைப்பாளர் கலைவாணி உள்ளிட்ட 7 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர்களிடமிருந்து சட்டவிரோதமாக கடத்தி விற்கப்பட்ட 2 குழந்தைகளும் மீட்கப்பட்டனர். மேலும், காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வந்த 73 பேர் வேறு காப்பகங்களுக்கு மாற்றப்பட்டனர்.

இந்த விவகாரத்தில் தலைமறைவாகியிருந்த இதயம் அறக்கட்டளை நிறுவனர் சிவக்குமார் மற்றும் உதவியாளர் மாதர்ஷா ஆகிய இருவரையும் தனிப்படை காவல்துறையினர் பல்வேறு பகுதிகளில் தேடிவந்த நிலையில, தேனி மாவட்டம் போடி அருகே தமிழ்நாட்டின் எல்லைப் பகுதியில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

[su_image_carousel source=”media: 24861,24862″ crop=”none” captions=”yes” autoplay=”3″ image_size=”full”]

குழந்தைகள் கடத்தல் விவகாரத்தில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகளான சிவக்குமார் மற்றும் மாதர்ஷா கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் இதுவரை எத்தனை குழந்தைகளை விற்பனை செய்துள்ளார்கள் என்றும், உறுப்பு மாற்று விற்பனை தொடர்பாக ஏதும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே குழந்தைகள் கடத்தப்பட்ட புகாரில் இதயம் அறக்கட்டளையின் ஆதரவற்றோர் காப்பகத்தில் இருந்து பறிமுதல் செய்த பதிவேடுகளில் வயதானவர்கள் குறித்த விபரங்கள் மட்டுமே இருந்தன. குழந்தையுடன் மீட்கப்பட்ட ஆதரவற்ற பெண்கள் குறித்த விபரங்கள் இல்லை.

இந்நிலையில் காணாமல் போன பதிவேடுகள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கடந்த நான்கு நாட்களில் இம்மையத்திற்கு வந்து சென்றவர்கள் யார் யார் என கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தும் வருகின்றனர்.

ஒன்றிய அரசிற்கு எதிராக நடிகர் சூர்யா போர்க்கொடி!