உலக மக்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் “அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்” படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா இணைந்துள்ளனர்.

உலகளவில் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த ஹாலிவுட் திரைப்படமான அவெஞ்சர்ஸ் தி இண்ட் கேம் திரைப்படம் ஏப்ரல் 26ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இப்படம் இந்தியாவில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

மார்வெல் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் ரஸோ சகோதரர்கள் இயக்கியிருக்கும் இப்படத்தில் மார்வெல் சீரியசில் இடம்பெற்றிருந்த அனைத்து சூப்பர் ஹீரோக்களும் ஒன்றாக இணைந்துள்ள கடைசி பாகம் என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தின் இந்தி ஆன்ந்தம் பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டார். இப்பாடல் இந்தியா முழுவதும் சூப்பர் ஹிட் ஆன நிலையில் நேற்று இப்படத்தின் ‘தமிழ் ஆன்ந்தம்’ வெளியானது. இதன் வெளியீட்டு விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானுடன் நடிகர் விஜய்சேதுபதி மற்றும் நடிகை ஆண்ட்ரியா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இப்படத்தின் தமிழ் மொழி பெயர்பிற்கு விஜய்சேதுபதி அயன்மேனுக்கு டப்பிங் பேசியுள்ளார். அதுபோல், பிளாக் விடோவிற்கு ஆண்ட்ரியா டப்பிங் கொடுத்துள்ளார். மேலும் ஏ.ஆர்.முருகதாஸ் இப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.