கரூர் வைஷ்யா வங்கியில் காலியாக உள்ள வணிக மேம்பாட்டுத் துறை பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 600 பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள்: வணிக மேம்பாடு (Business Development Associate) – 600

சம்பளம்: மாதம் ரூ. 18,000 முதல்

வயதுவரம்பு: 28.02.2019 தேதிப்படி 21 முதல் 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

தகுதி: ஏதேனும் ஓர் துறையில் 50 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் துறை சார்ந்த பிரிவில் ஓர் ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.04.2019

விண்ணப்பிக்கும் முறை: கரூர் வைஷ்யா வங்கி (Karur Vysya Bank) என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்கள் அறிய…