நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம், வரும் 2021 ஜனவரி 13 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடத்துள்ள படம் ‘மாஸ்டர்’. இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

XB பிலிம் கிரியேட்டர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மார்ச் 15ஆம் தேதி நடைபெற்றது. தீபாவளியை முன்னிட்டு மாஸ்டர் படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் தென்னிந்தியாவின் திகம் லைக் செய்யப்பட்ட டீஸர் என்ற பெருமையையும் பெற்றது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, திரையரங்குகள் கடந்த எட்டு மாதங்களாக மூடப்பட்டு உள்ள நிலையில், இந்த படத்தின் வெளியீடு தள்ளிப்போனது.

இந்நிலையில், முதல்வர் பழனிசாமியுடன் நடிகர் விஜய் நேற்று திடீரென சந்தித்து பேசினார். அப்போது அமைச்சர் வேலுமணி, மாஸ்டர் பட தயாரிப்பாளர் லலித்குமார் ஆகியோர் உடனிருந்துள்ளனர்.

இந்தச் சந்திப்பில் திரையரங்கில் 50% இருக்கைகளை மட்டுமே நிரப்ப வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், அதனை 100% உயர்த்த வேண்டும். மேலும், ரசிகர்களுக்கான சிறப்பு காட்சிக்கும் அனுமதி வழங்க வேண்டும் என்று நடிகர் விஜய் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ஓடிடியில் படம் வெளியானால், ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைவார்கள் என்றும், இதனால், திரையங்கில் மட்டுமே படம் வெளியாக வேண்டும் என்று படத்தயாரிப்பாளரிடமும் நடிகர் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வரும் 2021 ஜனவரி 13 ஆம் தேதி மாஸ்டர் திரைப்படம் தமிழ் தெலுங்கு ஹிந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

ஜேஎன்யு கதைக்களத்தில் பார்வதி நடித்த படத்துக்கு சென்சார் அனுமதி மறுப்பு