திரையுலகில் 30வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு நடிகர் அஜித், ‘வாழு, வாழவிடு’ என்று ஸ்பெஷல் மெசேஜ் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். திரையுலகில் 29 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள அஜித், தற்போது 30வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். இதனை முன்னிட்டு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் அஜித், தனது மக்கள் தொடர்பாளர் வாயிலாக குறுந்தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் நடிகர் அஜித் கூறியிருப்பதாவது, “ரசிகர்கள், வெறுப்பவர்கள், நடுநிலையாளர்கள் என அனைவரும் ஒரே நாணயத்தின் மூன்று பகுதிகள்.

ரசிகர்களிடமிருந்து அன்பையும், வெறுப்பாளர்களிடமிருந்து வெறுப்பையும், நடுநிலையாளர்களின் நியாயமற்ற பார்வைகளையும் நான் முழு மனதாக ஏற்கிறேன். வாழு, வாழ விடு. என்றும் நிபந்தனையற்ற அன்புடன் அஜித் குமார்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சொகுசு காருக்கு வரி விலக்கு கோரிய வழக்கு; நடிகர் தனுஷுக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்விகள்