தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தற்போது இவர் பாலிவுட் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்ற செய்திகள் வெளியாகின. இந்நிலையில் பாலிவுட் படத்தில் கீர்த்தி சுரேஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வசூலைக் குவித்த பாலிவுட் படமான பதாய் ஹோவின் இயக்குனர் அமித் ‌ஷர்மா இயக்கும் இப்படத்தில், அஜய் தேவ்கன் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

இப்படம் முன்னாள் கால்பந்து கோச்சரரான சையது அப்துல் இப்ராகிம்மின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி உருவாகவுள்ளது. இதில் கீர்த்தியின் பாத்திரங்கள் இருவேறு தோற்றங்களில் இருக்கும். மிக இளவயது தோற்றம் ஒன்றிலும், கொஞ்சம் வயதான தோற்றம் ஒன்றிலும் நடிக்கிறார். போனி கபூர் தயாரிக்கும் இப்படம், அடுத்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.