மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை பெற்ற நடிகர் சஞ்சய் தத் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டது எப்படி? என்று மும்பை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை பெற்ற பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், சிறையில் இருந்து முன் கூட்டியே விடுதலை செய்யப்பட்டது எப்படி என்ற விவகாரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், சிறை நிர்வாகத்திடம் தமிழக சிறையில் உள்ள பேரறிவாளன் தரப்பில் கோரப்பட்டது.

இந்த தகவல்களை பெற முடியாததால், பேரறிவாளன் தரப்பில் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், மகாராஷ்டிரா தகவல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

அதில், “மும்பை தொடர் வெடிகுண்டு விவகாரத்தில் நடிகர் சஞ்சய் தத் முன் கூட்டியே விடுவிக்கப்பட்டது எப்படி? அதற்குப் பின்பற்றப்பட்ட நடைமுறைகள் என்ன? அதற்கான விபரங்களை ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளனுக்கு தரவேண்டும்.

மேற்கண்ட விவகாரத்தில், தமிழக அரசின் தீர்மானத்தை மத்திய உள்துறைக்கு தமிழக ஆளுநர் அனுப்பி வைத்தது தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்” என்று மும்பை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

முன்னதாக பேரறிவாளன் தரப்பில், கருணை மற்றும் அமைச்சரவை தீர்மானம் தொடர்பான விஷயத்தில் ஆளுநர் தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்தும் தமிழக ஆளுநருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

7 பேர் விடுதலை விவகாரம்; பரிந்துரையை நிராகரித்த ஆளுநர் புரோஹித்