உலகம் முழுவதும் அனைவரின் மனதிலும் நீங்காத இடம் பெற்றுள்ள ஒரு கார்ட்டூன் தொடர் என்றால் அது டாம் அண்ட் ஜெர்ரி தான்.

டாம் அண்ட் ஜெர்ரி தொடரில் வரும் பூனையும் எலியும் செய்யும் சேட்டைகள் குழந்தைகள் முதல் அனைத்து வயதினரையும் கவர்ந்து கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ளது.

தற்போது லைவ் ஆக்சனில் மீண்டும் கலக்க வந்துள்ளனர் டாம் மற்றும் ஜெர்ரி. இந்த இரண்டு கார்ட்டூன் கேரக்டர்கள் மட்டும் முழுக்க முழுக்க கார்ட்டூனாக இருக்க, இந்த படத்தில் மற்ற அனைத்தும் லைவ் ஆக்சனில் உருவாக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த டாம் அண்ட் ஜெரியை லைவ் ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாக்க வார்னர் ப்ரோஸ் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. டிம்ஸ் டோரியால் இயக்கத்தில் 2021 ஆம் ஆண்டு வெளியாக உள்ள இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

டிஜிட்டல் மீடியாக்களில் வெளிநாட்டு முதலீடுகள் 26% மட்டுமே; மத்திய அரசு கட்டுப்பாடு