உத்தரப் பிரதேசத்தில் கங்கை நதியில் படகில் சென்று வாக்காளர்களை சந்திக்கும் 3 நாள் பிரசார பயணத்தை காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா நேற்று தொடங்கினார்.  

உத்தரப் பிரதேசத்தில் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி மே 19ம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று தனது 3 நாள் பிரசார பயணத்தை தொடங்கினார். 

முன்னதாக அனுமன் கோயிலில் அவர் சிறப்பு வழிபாடு செய்தார். இதனைத் தொடர்ந்து கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சந்திக்கும் திரிவேணி சங்கமத்தில் இருந்து பிரசாரத்தை பிரியங்கா காந்தி தொடங்கினார்.  

இந்த 3 நாள் பிரசாரத்தின்போது அலகாபாத்தில் இருந்து பிரதமர் மோடியின்  மக்களவை தொகுதியான வாரணாசி வரை சுமார் 100 கி.மீ. தூரத்துக்கு படகில் செல்லும் பிரியங்கா காந்தி பொதுமக்களை சந்தித்து கட்சிக்கு ஆதரவு திரட்டுகிறார். 

இது தொடர்பாக பிரியங்கா வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களின் குரல்களை கேட்காமல் அவர்களது வலியை புரிந்துகொள்ளாமல் அரசியல் மாற்றம் என்பது சாத்தியமில்லை. 

நான் உங்களது வீடு தேடி வருவது ஒரு உண்மையான உரையாடலுக்காகத்தான். உங்களுடனாக கலந்துரையாடலின் அடிப்படையில் அரசியலில் மாற்றத்தை கொண்டுவருவோம் என உறுதியளிக்கிறேன். 

உங்களது பிரச்னைகளை சரி செய்வதற்கான பாதையை நோக்கித்தான் நகர்ந்து கொண்டிருக்கிறோம். மேலும் படகு பயணம் மூலம் மட்டுமின்றி பேருந்து, ரயில் மற்றும்  பாதயாத்திரையாகவும் சென்று மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளேன். கங்கை என்பது உண்மை மற்றும் சமத்துவத்தின் சின்னம், அது மக்களை வேறுபடுத்தாது. உத்தரப்பிரதேசத்தின் ஆயுள்ரேகையாக கங்கை உள்ளது. அவளது ஆதரவோடு நான் உங்களை சந்திக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

இந்த பிரசாரத்தின்போது பாதோகி மற்றும் மிர்சாப்பூர் மாவட்டங்களையும் பிரியங்கா காந்தி பார்வையிட உள்ளார்.  முன்னதாக பிரியங்கா காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் முன்னாள் பிரதமரும், தனது பாட்டியுமான இந்திராகாந்தி பிறந்த ஸ்வராஜ் பவனுடனான தனது நினைவுகளை நினைவுகூர்ந்து இந்தியில் பதிவிட்டு இருந்தார்.

உ.பி.யின் அலகாபாத் முதல் வாரணாசி வரை கங்கையில் 140 கி.மீ. படகில் பயணம் செய்து பிரசாரம் செய்கிறார் பிரியங்கா காந்தி. பிரயாக்ராஜில் பூஜைகள் நடத்தி தனது பயணத்தை நேற்று தொடங்கினார் பிரியங்கா. ‘கங்கா யாத்ரா’ என இதற்கு பெயரிடப்பட்டுள்ளது.

 

காங்கிரஸ் தொண்டர்களும் பெருந்திரளான மக்களும்  பிரயாக்ராஜில் திரண்டனர். மோடி பதவி எற்ற 3 வருடத்தில் கங்கையை சுத்தபடுதுவேன் என கூறி 3000 கோடிக்கு மேல செலவழித்தும் இன்னும் 10% கூட கங்கை சுத்தமாகதா நிலையில் அந்த கங்கையில் நதியிலே பிரியங்கா செல்வது பாஜகவினரை பதற செய்து உள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன 

மக்களவை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்ற முடிவை பிரியங்கா காந்தி மாற்றிக்கொள்ள வேண்டும். புல்புர் தொகுதியில் அவர் போட்டியிட வேண்டும் என காங்கிரஸ் தொண்டர்கள் கோரி வருகின்றனர். 

கங்கா யாத்திரைக்காக வந்த பிரியங்காவிடம் இந்த கோரிக்கை மனுவையும் அளித்தனர். ‘மக்களவை தேர்தலில் பிரியங்கா நிச்சயம் போட்டியிட வேண்டும் என விரும்புகிறோம். 

இதன் மூலம் மாநிலத்தில் காங்கிரஸ் புத்தெழுச்சியும் உற்சாகமும் பெற்று வியத்தகு மாற்றங்களை நிகழ்த்திக் காட்டும்’ என பிரயாக்ராஜ் காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் ஹசீப் அகமது கூறியுள்ளார். நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் விஜயலட்சுமி பண்டிட் போன்ற பல பிரபலங்கள் போட்டியிட்டு வென்ற தொகுதிதான் புல்புர் என்பது குறிப்பிடதக்கது