தமிழ் சினிமாவில் 1990களில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை கஸ்தூரி. இவர் பிரபு, கமல், சத்யராஜ் உட்பட பலருக்கும் ஜோடியாக நடித்துள்ளார். சத்யராஜுடன் இணைந்து நடித்த அமைதிபடை படம் இவருக்கு நல்ல பெயர் வாங்கித் தந்தது. மேலும் இந்தியன் படத்தில் கமலின் பெண்ணாக நடித்திருந்தார் கஸ்தூரி.

தற்போது, நடிகை கஸ்தூரி இயக்குனர் சலங்கை துரை இயக்கத்தில் உருவாகி வரும் “இபிகோ 302” என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். சலங்கை துரை ஏற்கனவே நடிகர் கரண் நடிப்பில் வெளியான காத்தவராயன் படத்தை இயக்கியவர்.

இப்படத்தில் அறிமுக நடிகர்களான நாக சக்தி, வர்ஷிதா, வையாபுரி ஆகியோர் நடிக்கின்றனர். கஸ்தூரி இபிகோ 302 படத்தில் போலீஸ் அதிகாரியாக ரீஎண்ட்ரி கொடுத்துள்ளார். இப்படம் குறித்து பேசுகையில், படங்களில் நான் மீண்டும் நடிப்பதற்கு விஜய் சேதுபதி தான் காரணம் என கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

விஜய் சேதுபதி குறித்து பேசிய கஸ்தூரி, அவர் ஹீரோவாகவும் நடிக்கிறார். வில்லனாகவும் நடிக்கிறார். பெண்ணாகவும் நடிக்கிறார், திருநங்கையாகவும் நடிக்கிறார். இப்போது அவர் தான் என் இன்ஸ்பிரேஷன் என்றும், அவரை போல் தான் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசைப்படுவதாகவும் கஸ்தூரி கூறியுள்ளார்.

கஸ்தூரியின் இபிகோ 302 படத்தில் இருந்து இவரின் ஹாட்டான புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.