உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ பிரணவ் சிங் குடிபோதையில் துப்பாக்கியுடன் நடனமாடும் வீடியோ வைரலானதை தொடர்ந்து அவரை 6 ஆண்டுகள் கட்சியை விட்டு தூக்கி எறிய பாஜக மேலிடத்திற்கு பரிந்துரை செய்துள்ளார்கள்.
 
உத்தரகண்ட் மாநில பாஜக எம்எல்ஏ பிரணவ் சிங் ஒரு கையில் மது கோப்பையுடனும், மறு கையில் துப்பாக்கிகளுடனும் நடனம் ஆடியுள்ளார். இத்துடன் துப்பாக்கியை வாயில் பிடித்தபடியும் நடனம் ஆடியுள்ளர்.
 
அவருக்கு தூப்பட்டி கிடைத்து தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த துப்பாக்கிகளுக்கு பிரணவ்வுக்கு உரிமை உள்ளதா என்பதும் குறித்தும் விசாரணை நடக்கிறது.
 
இந்நிலையில் உத்தரகண்ட் மாநில பாஜக தலைவர் ஷியாம் ஜாஜூ சர்சசை எம்எல்ஏ குறித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் ” எம்எல்ஏ பிரணவ் பத்திரிக்கையாளர்களை மிரட்டிய புகாரில் ஏற்கனவே 3 மாத சஸ்பெண்டில் உள்ளார். அவர் இவ்வாறு நடந்து கொண்டது கடும் கண்டனத்திற்கு உரியது. பிரணவ் மீது கடும் நடவடிக்கை எடுக்க பாஜக மேலிடத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது” என்றார்.
 
இதனிடையே எம்எல்ஏ பிரணவ்வை பாஜகவில் இருந்து 6 ஆண்டுகள் சஸ்பெண்ட் செய்ய பாஜக மேலிடத்திற்கு உத்தரகண்ட் பாஜக தலைமை பரிந்துரை செய்துள்ளது. இதன் மூலம் பாஜகவில் இருந்து பிரணவ் 6 ஆண்டுகள் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.
 
இந்நிலையில் தான் ஆடியது தன்னுயை தனிப்பட்ட விருப்பம் என்றும், நான் நடனம் ஆடியதில் என்ன தவறு என்றும் பாஜக எம்எல்ஏ பிரணவ் கேள்வி எழுப்பினார்.
 
இது மேலும் சர்ச்சையை சமூக வலைதளத்தில் ஏறுபடுத்தி வருகிறது