திருநெல்வேலி தாராபுரம் பிள்ளையார் கோவில் தெருவில் வசிக்கும்
சி.மகாராஜா ஐந்து மாதம் முன்பு ஆதாவது பிப்ரவரி மாதத்தில் பாளையங்கோட்டை மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள அன்னபூர்ணா ஓட்டலில் 2 தயிர் பார்சல் வாங்கியிருக்கிறார்.
 
அதற்கு ஓட்டல் நிர்வாகம் தயிருக்கு 2 ரூபாய் ஜிஎஸ்டி, பேக்கிங் கட்டணமாக 2 ரூபாய் என 44 ரூபாய்க்கு ஒரு ரசீதைத் தந்துள்ளது.
 
ரசீதை வாங்கிப் பார்த்த மகாராஜா, “தயிருக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.எனவே அதற்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது.அதுபோல பேக்கிங் கட்டணமும் வசூலிக்கக் கூடாது என சட்டம் உள்ளது. இந்த இரண்டும் தவறு” என ஓட்டல் நிர்வாகத்திடம் மகாராஜா அறிவுரை செய்துள்ளார்.
 
அதற்கு அந்த ஓட்டல் நிர்வாகமோ “தயிருக்கு ஜிஎஸ்டி கட்டணம் மற்றும் பேக்கிங் கட்டணம் சேர்த்துத் தான் தருவோம்.இஷ்டமிருந்தால் கொண்டுபோ இல்லாவிட்டால் தயிரைக் கொட்டிவிட்டு போங்க ” என திமிறுடன் பதிலைத் தர., இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மகாராஜா தயிரை 44 ருபாய் தந்து வாங்கிக் கொண்டு வந்துள்ளார்.
 
பின்னர் இது தொடர்பாக பாளையங்கோட்டையில் உள்ள வணிக வரித்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் சென்று புகார் தந்துள்ளார்.
 
ஆனால், “இது போல ஒரு நாளைக்கு ஏகப்பட்ட புகார்கள் வருகிறது.இதை எல்லாம் என்னால் ஒன்றும் செய்ய முடியாது…” என வணிகவரித்துறை உதவி ஆணையர் கடுப்பில் பேச
 
அசராத மகாராஜா வழக்கறிஞர் உதவியுடன் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
 
வழக்கை விசாரித்த நீதிமன்றம், “தயிருக்கு ஜிஎஸ்டி வசூலித்தது தவறு.அதோடு அது சம்பந்தமான புகாரை விசாரிக்க மறுத்த வணிக வரித்துறை உதவி ஆணையர் செய்ததும் தவறு என்று கூறி இருவருக்கும் 10 ஆயிரம் ரூபாய் அபராதத்தோடு வழக்கு செலவான 5 ஆயிரம் ரூபாய் சேர்த்து 15 ஆயிரம் ரூபாய்களை மனுதாரரான மகாராஜாவிற்குத் தர வேண்டும் என தீர்ப்பு தந்துள்ளது…”
 
அதோடு தயிருக்கு அன்னபூர்ணா ஓட்டல் நிர்வாகம் தாங்களாகவே போட்ட 2 ரூபாய் ஜிஎஸ்டி மற்றும் பேக்கிங் கட்டணம் 2 ரூபாய் ஆக மொத்தம் 4 ரூபாயை திருப்பித் தர வேண்டும் என்றும் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
 
தகவல் உதவி : துரை மோகன்ராஜ்