தமிழகத்தில் இன்று 3882 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 94049 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காத வேகத்தில் பரவி வருகிறது. நாள்தோறும் சுமார் 4000 பேர் வரை கொரோனவால் பாதிக்கப்படுகின்றனர். தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை எட்டும் நிலையில் உள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், தமிழகத்தில் 3,882 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 3,807 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். 75 பேர் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்.

கடந்த சில நாட்களாக சென்னையில் மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தைக் கடந்து வருகிறது. இன்றும் சென்னையில் மட்டும் 2,182 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. சென்னையில் மொத்த பாதிப்பு 60,533 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் வாசிக்க: நெய்வேலி அனல் மின் நிலையத்தில் 2 முறை வெடி விபத்து; இதுவரை 6 பேர் மரணம், 17 பேர் படுகாயம்

இதனிடையே நாளுக்கு நாள் குணமடையும் நபர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று 2852 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

ஆனால் தமிழகத்தில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் பலி எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது. தமிழகத்தில் இன்று 63 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். தமிழகத்தில் மொத்தமாக 1264 பேர் இதுவரை கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.

சென்னையைத் தவிர்த்து, மதுரையில் 297 பேருக்கும், செங்கல்பட்டில் 226 பேருக்கும், சேலத்தில் 178 பேருக்கும், திருவள்ளூரில் 147 பேருக்கும், ராமநாதபுரத்தில் 111 பேருக்கும் கொரோனா கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.