தொகுதி வெளிட்டு நிகழ்வில் திமுக அதன் கூட்டணி கட்சி அனைத்தையும் ஒரே மேடையில் வைத்து நடத்திய நிலையில் அதிமுக பாஜகவை மட்டுமே வைத்து தொகுதிகளை அறிவித்த விதம் பாமக தேமுதிக தலைமைகளை காயப்படுத்தியதாக அக்கட்சி வட்டார தகவல் தெரிவித்த நிலையில்
 
தமிழகத்தில் பல இடங்களை அதிமுக மற்றும் பாஜக வுக்கு உறுதுனையாக தேமுதிக மற்றும் பாமக தொண்டர்கள்  வேலை செய்ய முரண்டு பிடித்து மறுத்து வந்த நிலையில் .,
 
ஆரணியில் இது முதல் முறையாக பகிரங்கமாக வெடித்து அதிமுகவையும் பாஜகவையும் கலக்கமடைய செய்துள்ளதாம்
 
ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பாக தற்போதைய எம்பியான செஞ்சி சேவல் ஏழுமலை மீண்டும் போட்டியிடுகிறார். இந்த நிலையில் ஆரணியில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
 
அதில் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேவூர் ராமசந்திரன் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் அதிமுக கூட்டணி கட்சிகளான பாஜக, தமிழ்மாநில காங்கிரஸ் மற்றும் புதிய நீதி கட்சியை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
 
ஆனால் முறையான அழைப்பு இல்லை என கூறி தேமுதிக மற்றும் பாமகவை சேர்ந்தவர்கள் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தை புறக்கணித்தது இது வரை அரசல் புரசலாக பேசபட்டதை உறுதி செய்வது போல உள்ளது என லோக்கல் அதிமுகவினர் தெரிவித்து உள்ளனர்