உயர் நீதிமன்றம் சட்டம்

தசரா பண்டிகை: அக்டோபர் 17 முதல் 27ம் தேதி வரை சென்னை உயர்நீதிமன்றம் விடுமுறை

தசரா பண்டிகையை முன்னிட்டு சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு வரும் அக்டோபர் 17ம் தேதி முதல் 27ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை பதிவாளர் சி.குமரப்பன் வெளியிட்டுள்ளார்.

அவசர வழக்குகளுக்கு அக்டோபர் 20ல் மனுதாக்கல் செய்தால் அக்டோபர் 22ல் விசாரணை நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் பார்த்திபன், வேல்முருகன், ஜெயச்சந்திரன், சுவாமிநாதன் வழக்குகளை விசாரிப்பர் என்றும் நீதிபதிகள் ஆஷா, சரவணன் ஆகியோரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகளை விசாரிப்பார்கள்.

உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் கல்யாண சுந்தரம், அப்துல் குத்தூஸ் ஆகியோர் வழக்குகளை விசாரிப்பார்கள் என்று பதிவாளர் சி.குமரப்பன் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க: ரிபப்ளிக் சேனல் டிஆர்பி ரேட்டிங் மோசடி: தரவரிசைப் பட்டியல் வெளியிடுவதை நிறுத்திய பிஏஆர்சி

ஸ்பெல்கோ
ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.