வன்முறையை தூண்டும் வகையில் வீடியோ வெளியிட்டதாக டொனால்ட் டிரம்பின் பேஸ்புக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் முடக்கப்பட்டது.

கடந்த நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி பெற்றார். வரும் 20 ஆம் தேதி முறைப்படி அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பிடன் பதவி ஏற்க உள்ளார்.

இந்நிலையில், ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் சான்றிதழ் அளிக்கும் நிகழ்ச்சி நடாளுமன்றத்தில் நடைபெற்றது. இதனை எதிர்த்து டிரம்ப் ஆதரவாளர்கள் கேபிட்டல் கட்டடத்தில் வன்முறையில் ஈடுபட்டனர். இந்த வன்முறையில் துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண் பலியானார். மேலும் 3 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர்.

அமெரிக்க நாடாளுமன்றத்தை முற்றுகையிட்ட தன்னுடைய ஆதாரவாளர்களைத் தூண்டிவிடும் வகையில் டிரம்ப் ட்விட்டரில் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் அவர் உங்கள் வலி எனக்கு தெரியும். அதிபர் தேர்தலால் நீங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பது எனக்கு தெரியும். நமது வெற்றியை ஜோ பிடன் திருடி விட்டார்.

கடந்த நவம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தல் மோசடித் தேர்தல் ஆட்சியை மீண்டும் கைப்பற்றுவோம். எனினும் இப்போது நீங்கள் அமைதியாகக் கலைந்து செல்லுங்கள் என்று போராட்டத்தை தூண்டிவிடும் வகையில் பேசியிருந்தார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் ட்ரம்ப் ஆதரவாளர்கள் வன்முறை; 4 பேர் பலி

இந்த வீடியோ வன்முறையை தூண்டுவதாக இருப்பதாக இந்த வீடியோவை ட்விட்டர் நிறுவனம் நீக்கியது. இதனையடுத்து, அதிபர் டிரம்ப்பின் ட்விட்டர் கணக்கை 12 மணிநேரத்துக்கு முடக்கி வைத்தும், அதில் பதிவிட்ட சில ட்விட்டர் கருத்துக்களை நீக்க வேண்டும் என ட்விட்டர் நிர்வாகம் உத்தரவிட்டது.

இதுதொடர்பாக ட்விட்டர் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், “வாஷிங்டன் டிசியில் இதுவரையில்லாத வகையில் வன்முறையான சூழல் காணப்படுகிறது. ஆதலால், அதிபர் ட்ரம்ப் வன்முறை தொடர்பாகவும், போராட்டம் தொடர்பாகவும் இதற்கு முன் ட்விட்டர் பதிவிட்ட 3 கருத்துக்களை நீக்க வேண்டும், பல்வேறு கொள்கை விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன.

இதனால் அடுத்த 12 மணிநேரத்துக்கு அதிபர் ட்ரம்ப் ட்விட்ர் கணக்கு முடக்கப்படுகிறது. இந்த ட்விட்டர் பதிவுகள் நீக்கப்படாவிட்டால், ட்விட்டர் கணக்கு தொடர்ந்து முடக்கப்படும், எதிர்காலத்தில் தொடர்ந்து விதிமுறைகளை மீறினால் நிரந்தரமாக முடக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளது.

[su_image_carousel source=”media: 21138,21139,21140″ crop=”none” columns=”3″ captions=”yes” autoplay=”3″ image_size=”full”]

பேஸ்புக் நிர்வாகமும், டிரம்பின் கணக்கை 24 மணிநேரத்துக்கு முடக்கி வைத்துள்ளது. அதிபர் ட்ரம்ப் சார்பில் பேஸ்புக்கிலும், யூடியூப்பிலும் பதிவிடப்பட்ட வீடியோக்களும் நீக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து பேஸ்புக் நிறுவனம் கூறுகையில் அதிபர் டிரம்பின் பேஸ்புக் பக்கத்திற்கு எதிராக இரு கொள்கை மீறல்களை எங்கள் நிறுவனம் ஆய்வு செய்துள்ளது. அவர் 24 மணி நேரத்திற்கு எந்த பதிவையும் வெளியிட முடியாது என தெரிவித்துள்ளது.

ட்விட்டர், பேஸ்புக் கணக்குகள் முடக்கப்பட்ட நிலையில் தற்போது டிரம்பின் இன்ஸ்டாகிராம் பக்கமும் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜனவரி 20 ஆம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராகிறார் ஜோ பிடன்