டெல்லி போராட்டம் குறித்த தகவல்கள் அடங்கிய ‘டூல் கிட்’ உருவாக்கி அதைப் பலருக்கு பகிர்ந்ததாக குற்றம்சாட்டி சுற்றுச் சூழலியல் ஆர்வலரான திஷா ரவியைக் டெல்லி காவல்துறை கைது செய்துள்ளதற்கு நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன.

மத்திய அரசின் வேளாண் சட்டத்தை கண்டித்து தலைநகர் டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். குடியரசு தினத்தில் நடைபெற்ற டிராக்டர் பேரணியில் ஒரு குறிப்பிட்ட பிரிவினரால் வன்முறை வெடித்தது.

காலிஸ்தான் ஆதரவாளர்களால் தான் இந்த வன்முறை தூண்டப்பட்டதாக கூறும் டெல்லி காவல்துறையினர், இணையத்தில் குறிப்பாக ட்விட்டரில் உலவிய டூல்கிட்டைக் அதற்கு ஆதாரமாக கூறுகின்றனர். இந்த டூல்கிட்டை சூழலியல் ஆர்வலரான கிரேட்டா தன்பெர்க் தனது ட்விட்டரில் பகிர்ந்தாகக் கூறி, அவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லி போராட்டத்தில் பங்கெடுக்க விரும்புவோர் போராட்டத்தைப் பற்றியும், அதில் தங்களின் பங்களிப்பை எவ்வாறு செய்ய முடியும் என்கிற விளக்கங்களும் அடங்கிய ‘டூல் கிட்’ உருவாக்கி அதைப் பலருக்கு பகிர்ந்ததாக குற்றம்சாட்டி சுற்றுச் சூழலியல் ஆர்வலரான திஷா ரவியை பெங்களூருவில் கைது செய்துள்ளது டெல்லி காவல்துறை.

திஷா ரவியை டெல்லி காவல்துறை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுற்றுச் சூழலியல் ஆர்வலரான திஷா ரவி, கிரேட்டா தன்பர்க்கின் ‘ஃப்ரைடே’ஸ் ஃபார் ஃபியூச்சர்’ (Fridays For Future) என்ற அமைப்பின் கிளையை இந்தியாவில் தொடங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

[su_image_carousel source=”media: 22353,22354,22355″ crop=”none” captions=”yes” autoplay=”3″ image_size=”full”]

இவரது கைதுக்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. சமூக அக்கறையாளர்கள், சமூக நலப் போராளிகள் மீது மத்திய பாஜக அரசு அடக்குமுறையை செலுத்துவதாக எதிர்ப்பு குரல்கள் வலுத்து வருகிறது.

இந்த நிலையில் திஷா ரவி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், எனது தனிப்பட்ட உரையாடல்கள் மற்றும் தகவல் தொடர்பு உள்ளிட்ட விசாரணை விவரங்களை, ஊடகம் உள்ளிட்ட எந்தவொரு மூன்றாம் நபருக்கும் கசியவிடக்கூடாது என்று டெல்லி காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று திஷா ரவி மனுவில் கூறி உள்ளார்.

பாஜக அரசின் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சமாட்டேன்: கிரேட்டா தன்பெர்க்