இந்தியாவில் மக்கள் மனம் கவர்ந்த முதலமைச்சர்கள் பட்டியலில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலிடம் பிடித்துள்ளார்.

இந்தியா டுடே சார்பில் அனைத்து மாநில முதலமைச்சர்களின் திறன் மற்றும் செயல்பாடு குறித்து பொதுமக்களிடம் கருத்து கணிப்பு நடத்தியுள்ளது. அந்த கருத்து கணிப்பின் முடிவுகளை தற்போது வெளிட்டது.

அதில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 42% ஆதரவுடன் முதலிடம் பிடித்துள்ளார். இதன் மூலம் தனது திறன் மற்றும் செயல்பட்டால் பொதுமக்களிடம் மு.க.ஸ்டாலின் நன்மதிப்பு பெற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

அந்த பட்டியலில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் 38% ஆதரவுடன் 2ஆம் இடத்தையும், கேரள முதல்வர் பினராயி விஜயன் 35% ஆதரவுடன் 3ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர். மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே 4ஆம் இடத்திலும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி 5ஆம் இடத்திலும் உள்ளனர்.

https://www.facebook.com/savenra/posts/6858458124180052

சிறந்த முதல்வர்கள் பட்டியலில் முதல் 5 இடத்தில் பாஜக கட்சியைச் சேர்ந்த முதல்வர்களோ, பாஜகவுடன் கூட்டணியில் உள்ள முதல்வர்களோ இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போன்று பதவியேற்ற புதிதில் மக்களிடம் செல்வாக்கு பெற்று இருந்த ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன், தற்போது முதல் 10 இடங்களில் கூட இடம் பெறாமல் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளார் என்பது ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.

இயல், இசை, நாடக மன்றத் தலைவராக வாகை சந்திரசேகர் நியமனம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு