6 சிறுபான்மையினர் சமூகத்தினருக்கு குடியுரிமை வழங்கும் அதிகாரத்தைக் குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களைச் சேர்ந்த 13 மாவட்ட ஆட்சியர்களுக்கு இந்திய ஒன்றியத்தின் உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது.

அகதிகளுக்கு இந்திய குடியுரிமை அளிக்கும் பணியை தொடங்க முனைந்துள்ள ஒன்றிய உள்துறை அமைச்சகம், இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து அகதிகளாக இந்தியாவுக்கு வந்து,

குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் குடியேறி உள்ளவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநிலங்களில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள், கிறிஸ்தவர்கள், பார்சி இனத்தை சேர்ந்தவர்கள், சீக்கியர்கள் மற்றும் புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் குடியுரிமை பெற விண்ணப்பிக்கலாம் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த பட்டியலில் இஸ்லாமியர் இல்லை.

[su_image_carousel source=”media: 23801,23800″ crop=”none” captions=”yes” autoplay=”3″ image_size=”full”]

மே 28 ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின் படி, இந்திய குடியுரிமை சட்டம், 1955 பிரிவு 5 மற்றும் 6ன் கீழ் குடியுரிமை வேண்டி விண்ணப்பித்துள்ள பாகிஸ்தான், வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த இந்து, சீக்கியம், பௌத்தம், ஜைனம், பார்சி மற்றும் கிறுஸ்துவ மதத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்தவரகளுக்கு சட்ட பாதுகாப்பு கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் குடியுரிமை பெறுவதற்கு 11 ஆண்டுகள் தங்கியிருக்க வேண்டும் என விதியை 5 ஆண்டுகளாக தளர்த்தி இருப்பதன் மூலம், அந்த விண்ணப்பங்களை விரைவாக பரிசீலிக்கும் ஒரு வாய்ப்பை சிஏஏ உருவாக்கியுள்ளது.

இந்தியாவுக்கு 2014 ஆம் வருடத்துக்கு முன்பு அகதிகளாக வந்து இங்கே வசித்து வரும் இந்த மூன்று நாடுகளை சேர்ந்த சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கலாம். அப்படி அகதிகளாக வசித்து வருபவர்கள் அந்தந்த மாவட்ட ஆணையர் அலுவலகத்தில் விண்ணப்பம் அளிக்கலாம் என தற்போது உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அந்த விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் அந்தந்த மாநிலங்களின் உள்துறை செயலாளர்கள் பரிசீலனை செய்யலாம். அப்படி பரிசீலனை நடந்த பிறகு தகுதியானவர்கள் என அதிகாரிகளால் தேர்ந்தெடுக்கப்படும் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை சான்றிதழ் அளிக்கப்படும்.

இதன் அடிப்படையிலேயே அவர்கள் இந்திய குடிமக்களுக்கு அரசியல் சாசனப்படி வழங்கப்பட்டுள்ள அனைத்து உரிமைகளையும் பெறலாம் என உள்துறை அமைச்சகத்தின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எங்கள் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்; மன் கி பாத் உரையில் மோடி பெருமிதம்