தமிழகத்தில் தீபாவளியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் 2 நாட்களில் மட்டும் ரூ.466 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன.

தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் மது விற்பனைக்காக டாஸ்மாக் கடைகளுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இதனால் மதுபான கடைகளில் வழக்கமான நேரங்களைக் காட்டிலும் கூடுதல் நேரம் மற்றும் விலைக்கும் மதுவிற்பனை தொடர்கிறது.

ஆனாலும் ஒவ்வொரு பண்டிகையைவிடவும் அடுத்த பண்டிகையில் விற்பனை அதிகரித்துக் கொண்டே உள்ளது. கொரோனா நெருக்கடி காரணமாக பொருளாதார தேக்கநிலை உருவாகியுள்ளது எனக் கூறப்படும் நிலையில், முந்தைய ஆண்டுகளை விட இந்தாண்டு அதிகளவில் மது விற்பனை நடைபெற்றுள்ளது.

இந்த ஆண்டு தீபாவளி கொண்டாடப்பட்ட வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை 2 நாட்களில் மட்டும் ரூ466 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில் மதுரை மண்டலத்தில் தான் அதிகபட்சமாக ரூ103.82 கோடிக்கு மது விற்பனையானது.

2வதாக திருச்சி மண்டலத்தில் மட்டும் ரூ95.47 கோடிக்கும், 3வதாக சென்னை மண்டலத்தில் ரூ.94.36 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு தீபாவளியன்று டாஸ்மாக் கடைகளில் 2 நாட்களில் ரூ.455 கோடிக்கும், 2018ஆம் ஆண்டில் ரூ.328 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

தனக்கு எதிரான விசாரணை குழுவை சந்திக்க தயார்- துணைவேந்தர் சூரப்பா