கொரோனா வைரசில் இருந்து பாதுகாத்துக் கொள்ள அடிக்கடி கிருமி நாசினியை பயன்படுத்தினால் கைரேகை அழியும் ஆபத்து இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் உலக நாடுகளில் கொரோனா பரவத் தொடங்கியது. இந்தியாவில் கடந்த 2020 மார்ச் மாதம் முதல் பல மாதங்கள் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

பின்னர் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு, தற்போது மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். இருப்பினும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கிருமி நாசினியை பயன்படுத்தும் பழக்கம் மக்களிடையே அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கிருமி நாசினியை அடிக்கடி பயன்படுத்தினால் கைரேகை அழியும் ஆபத்து இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இது தொடர்பாக தோல் மருத்துவ நிபுணர்கள் கூறும்போது, தற்போது பல்வேறு அலுவலகங்களில் பயோ மெட்ரிக் முறை மீண்டும் பயன்படுத்தப்படுகிறது.

அடிக்கடி கிருமி நாசினியை பயன்படுத்துவதால் கைரேகை அழியும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. சானிடைசர் உள்பட கிருமி நாசினியை அடிக்கடி பயன்படுத்துவதால் மேல் தோல் உரிதல் அதிகரிக்கும். இதனால் 3 முதல் 4% பேர் தங்களது கைரேகை பதிவாகவில்லை என்று முறையிட்டுள்ளார்கள்.

இதன் காரணமாக ஆல்கஹால் தன்மை கொண்ட சானிடைசருக்கு பதிலாக சோப்பை பயன்படுத்தலாம். அல்லது சானிடைசர் பயன்படுத்திய சிறிது நேரத்தில் கைகளை ஈரப்பதமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

கிருமி நாசினியால் கைரேகை அழியும் நிலை ஏற்படும் போது வைட்டமின் ‘ஏ’ வகையான பொருட்களை பயன்படுத்தினால் தோல் வேகமாக மீண்டும் உருவாகும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

வாகனங்களுக்கு பாஸ்டேக் இல்லாவிட்டால் 2 மடங்கு கட்டணம்- மத்திய அரசு