வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் உள்ள ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தலைநகர் டெல்லி எல்லைகளில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாயிகள் போராட்டம் 86வது நாளை எட்டி உள்ள நிலையில், மத்திய அரசு விவசாயிகளுடன் பல கட்ட பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டு, எந்த தீர்வும் கிடைக்கவில்லை. இதனையடுத்து விவசாயிகள் வேளாண் சட்ட எதிர்ப்பை தீவிரப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

அந்தவகையில் இன்று (பிப்ரவரி 18) பகல் 12 மணி முதல் 4 மணி வரை நாடு முழுவதும் 4 மணி நேர ரயில் மறியல் போராட்டத்துக்கு விவசாயிகள் அழைப்பு விடுத்தனர். இதற்கான ஏற்பாடுகளை அவர்கள் தீவிரமாக மேற்கொண்டு வந்தனர்.

[su_image_carousel source=”media: 22319,22318″ crop=”none” captions=”yes” autoplay=”3″ image_size=”full”]

அதேசமயம் நாடு முழுவதும் ரயில் போக்குவரத்தை உறுதி செய்ய ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். ரயில் மறியலை தடுத்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன.

மறியல் போராட்டத்திற்கு வரும் விவசாயிகளை தடுப்பதற்காக முக்கிய ரயில் நிலையங்களில் போலீசார் குவிக்கப்பட்டனர். குறிப்பாக பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசத்தில் ரயில் பாதுகாப்புக்காக கூடுதல் படைகள் களமிறக்கப்பட்டிருந்தன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லியில் உள்ள 4 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், விவசாயிகள் திட்டமிட்டபடி பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்த பேரணியாக சென்றனர். ஆனால், ரயில் நிலையங்களில் விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தியதால் ரயில் நிலைய வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

[su_image_carousel source=”media: 22320,22321″ crop=”none” captions=”yes” autoplay=”3″ image_size=”full”]

முன்னதாக விவசாயிகளின் ரயில் மறியல் போராட்டம் குறித்து ரயில்வே பாதுகாப்பு படை இயக்குனர் அருண் குமார் பேசும்போது, “விவசாயிகளின் ரயில் மறியல் தொடர்பாக நாங்கள் உளவுத்தகவல்களை தொடர்ந்து சேகரித்து வருகிறோம். இதில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களும் வேறு சில பகுதிகளையும் நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம்.

இந்த பகுதிகளில் கூடுதலாக 20 கம்பெனி (சுமார் 20 ஆயிரம் வீரர்கள்) ரயில்வே பாதுகாப்பு சிறப்பு படையினரை பணியில் அமர்த்தி உள்ளோம். இந்த போராட்டம் தொடர்பாக மாவட்ட நிர்வாகங்களை தொடர்பு கொண்டு பேசி வருகிறோம். அத்துடன் கட்டுப்பாட்டு அறையும் திறக்க முடிவு செய்துள்ளோம். அனைவரும் அமைதியை கடைப்பிடிக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்திருந்தார்.

டெல்லி செங்கோட்டை வன்முறை: நடிகர் தீப் சித்துவுக்கு மேலும் 7 நாட்கள் போலீஸ் காவல்