அமித்ஷா தமிழகம் வருவதற்கு எதிராக ட்விட்டரில் #GoBackAmitShah ஹாஷ்டேக் டாப் டிரெண்டிங் ஆனது.

மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக முன்னாள் தேசியத் தலைவருமான அமித்ஷா நவம்பர் 21 சென்னை வருகிறார். தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில் தமிழகத்திற்கு அமித்ஷா வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அமித்ஷா நவம்பர் 21 திருவள்ளூர் மாவட்டம், தேர்வாய்கண்டிகையில் ரூ.380 கோடி மதிப்பீட்டில் புதிய நீர்த்தேக்கத் திட்டத்தை தொடக்கி வைக்கிறார். மேலும் ரூ.61,843 கோடி மதிப்பீட்டில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டம்,

கோயம்புத்தூர்- அவினாசி சாலையில் ரூ.1,620 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட சாலைத் திட்டம், கரூர் மாவட்டம் நஞ்சை புகளூரில் ரூ.406 கோடியில் காவேரி ஆற்றின் குறுக்கே கதவணைத் திட்டம், ரூ.309 கோடியில் சென்னை வர்த்தக மையம் விரிவுபடுத்தும் திட்டம்,

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் திட்டங்களான வல்லூரில் ரூ.900 கோடியில் பெட்ரோலிய முனையம், அமுல்லைவாயல் ரூ.1,400 கோவியில் லூப் பிளானட் அமைத்தல் மற்றும் காமராஜர் துறைமுகத்தில் ரூ.900 கோடியில் புதிய இறங்கு தளம் அமைக்கும் திட்டம் ஆகியவற்றிக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

இந்நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை வகிக்கிறார். துணை முதல்வர் பன்னீர்செல்வம், தொழில்துறை அமைச்சர் சம்பத் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொள்கின்றனர். மேலும், தமிழக பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

இந்நிலையில், அமித்ஷா தமிழகம் வருவதற்கு எதிராக ட்விட்டரில் #GoBackAmitShah ஹாஷ்டேக் டிரெண்டிங் ஆகி வருகிறது. பிரதமர் மோடி தமிழகம் வரும்போது #GoBackmodi ட்விட்டரில் டிரெண்டிங் ஆன நிலையில், தற்போது, அமித்ஷா வருகைக்கும் எதிராக #GoBackAmitShah டிரெண்டிங் ஆனது பாஜகவினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய கீதம் பாடத் தெரியாதவரைக் கல்வி அமைச்சராக்குவதா… நிதிஷ்குமார் அமைச்சரவையில் சர்ச்சை