நோட்டீஸ் வழங்கப்பட்ட காங்கிரஸ் 4 எம்எல்ஏ-க்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கர்நாடக பேரவைத் தலைவரிடம் சித்தராமையா பரிந்துரை செய்துள்ளார்.
 
ரமேஷ் ஜார்ஹிகோலி, உமேஷ் ஜாதவ், மகேஷ் குமதல்லி மற்றும் என்.பி.நாகேந்திரா உள்ளிட்ட 4 பேருக்கும் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் கூட்டம் மற்றும் பட்ஜெட் கூட்டத் தொடர் உள்ளிட்டவற்றில் பங்கேற்கவில்லை என்பதால் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் சித்தராமையா, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்.
 
இதற்கு அவர்கள் தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மற்றொரு முறையும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், அவர்களிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.
 

இந்நிலையில், இந்த 4 எம்எல்ஏ-க்களையும் உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கர்நாடக பேரவைத் தலைவர் ரமேஷ் குமாருக்கு சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் ஜி.பரமேஷ்வர் ஆகியோர் திங்கள்கிழமை பரிந்துரை செய்துள்ளனர்.