கர்நாடக மாநிலத்தில், நடைபெற்று வரும், காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதள கட்சி கூட்டணி ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. காங்கிரசை சேர்ந்த மற்றும் மஜதவை சேர்ந்த எம்எல்ஏக்கள் மொத்தம் 16 பேர், இதுவரை ராஜினாமா செய்துள்ளனர்.
 
பேசப்பட்ட கோடிக்கணக்கில் பணம் கையில் வந்தவுடன் பின்னர் பாஜகவில் இணையும் திட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
 
ஒரு எம் எல் ஏக்கு தலா நூறு கோடி வரை பேரம் பேசப்பட்டு வருவதால் அதிரிச்சி அடைந்த பாஜக எம்எல்ஏக்கள் தங்களின் ஆதரவாளர்க்ளுடன் கொதிப்புடன் பேசி வருவதாக சேதி கசிந்த நிலையில் .,
கர்நாடக அரசியலில் தீடிர் திருப்பமாக, வேறு கட்சி எம்எல்ஏக்களை பாஜகவில் சேர்க்க கூடாது என அந்த கட்சி தொண்டர்களே போர்கொடி விடுத்து , எடியூரப்பா வீட்டை முற்றுகையிட்டுள்ளனர்.
 
இதேபோல, பெங்களூர் நகரின் கே.ஆர்.புரம் சட்டசபை தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ பைரத்தி பசவராஜ் பாஜக இணைய திட்டமிட்டுள்ளதால், அதற்கும் கே.ஆர்.புரம் பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
 
பைரத்தி பசவராஜிடம் அடுத்தடுத்து தோற்றவர் நந்தீஷ் ரெட்டி. பாஜகவுக்கு பசவராஜ் வந்தால், தனக்கு அரசியலில் எதிர்காலமே இல்லை என்று அஞ்சி நடுங்குகிறார் நந்தீஷ் ரெட்டி.
 
இதனால் அந்த தொகுதியின், பாஜகவை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ நந்தீஷ் ரெட்டி, பாஜக தலைவர் எடியூரப்பாவை நேரில் சந்தித்து பசவராஜை சேர்க்க கூடாது என வலியுறுத்தினார்.
 
மேலும் அவர் தொண்டர்களையும் உடன் அழைத்து சென்று எடியூரப்பாவுக்கு மிரட்டல் தொனியில் பேசி உள்ளார்
 
மற்றொரு பக்கம், பெங்களூர் நகரின், மகாலட்சுமி லேஅவுட் தொகுதியின் மஜத எம்எல்ஏ, கோபாலய்யா, பாஜகவில் சேர முயல்வதற்கும் தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
 
இதனால் டாலர்ஸ் காலனி பகுதியிலுள்ள எடியூரப்பா வீட்டில் இன்று நூற்றுக்கணக்கான பாஜக தொண்டர்கள் குவிந்து, கோபாலய்யாவை, பாஜகவில் சேர்க்க கூடாது என உரக்க குரல் எழுப்பியதால் பாஜக மேலிடம் அதிர்ச்சியில் உறைந்துள்ளது
 
ஏற்கனவே பாஜக நிர்வாகியை கொலை செய்த குற்றச்சாட்டு கோபாலய்யா மேலே உள்ளது. இப்போது அமைச்சர் பதவிக்காக அவர் பாஜக வர முயற்சி செய்கிறார்.
 
கோபாலய்யாவை பாஜகவில் சேர்த்தால், மகாலட்சுமி லேஅவுட் தொகுதி பாஜக நிர்வாகிகள் கடும் அதிருப்தியடைவார்கள் என்று எடியூரப்பாவிடம் கோபத்துடன் பாஜகவினர் வலியுறுத்தினர்
 
பாஜகவினர் இவ்வாறு தொடர் அதிருப்தி வெளிப்படுத்தியுள்ளதால், அக்கட்சி தலைமைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஒருவேளை, பிற கட்சியினர் பாஜகவில் பதவிகளை பெற்றால், ஏற்கனவே உள்ள நிர்வாகிகள் அல்லது எம்எல்ஏக்கள் வெளி ஏறினால் , பிள்ளையார் பிடிக்க குரங்காகி முடிந்த கதையாகி விட்டார்  என்ன செய்வது என பாஜக மேலிட தலைவர்கள் கலக்கதில் உள்ளனராம்.