கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாகவுள்ளதாகவும், இதற்கான புரமோ படப்பிடிப்பில் சமீபத்தில் கலந்து கொண்டதாகவும் செய்திகள் வெளிவந்தன.

இந்நிலையில் விஜய் டிவி தனது முதல் புரமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. இதில் கமல்ஹாசன் புதிய கெட்டப்பில் தோன்றுகிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

பிக்பாஸ் 1, பிக்பாஸ் 2 ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசன் வரும் ஜூன் மாதம் தொடங்கவுள்ளது.

மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் கடந்த சில நாட்களாக வெளிவந்து கொண்டிருக்கின்றது. நடிகைகள் லைலா, சுதா சந்திரன், ரமேஷ் திலக் ஆகியோர்கள் கலந்து கொள்வார்கள் என்று கூறப்பட்ட நிலையில் முவருமே இதனை மறுத்தனர்.

இந்நிலையில் தற்போது நடிகை சாக்சி அகர்வால், நடிகை அல்யா மானசா, நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் என மூன்று திரையுலக பிரபலங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

காலா, விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் நடித்த சாக்சி அகர்வால் தற்போது சிண்ட்ரெல்லா, உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார். அதேபோல் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலில் நடித்து வரும் அல்யா மானசா மற்றும் குணசித்திர நடிகர் எம்.எஸ்.பாஸ்கரும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.