நடிகர் ஜெயம் ரவி இயக்குனராக அவதாரம் எடுக்கவுள்ள முதல் படத்தில் யோகி பாபு ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ஜெயம் ரவி. அடங்க மறு படத்தின் வெற்றியை அடுத்து அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தின் நாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார்.

ஜெயம் ரவி பள்ளி மாணவனாகவும் இளைஞனாகவும் நடிக்கும் இப்படத்திற்கு ‘கோமாளி’ என பெயரிடயிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ஜூன் மாதம் இப்படம் திரைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து ஜெயம்ரவி நடிக்கும் புதிய படத்தை லக்‌ஷ்மண் இயக்குகிறார். இது ஜெயம் ரவி நடிக்கும் 25-வது படம்.

இப்படங்களை தொடர்ந்து விரைவில் ஜெயம் ரவி இயக்குனராக அவதாரம் எடுக்கவுள்ளார். இவர் இயக்கும் முதல் படத்தில் காமெடி நடிகர் யோகி பாபு ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.