பேட்ட படம் வெளியாகும் முன்பே விஸ்வாசம் படம் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா, யோகி பாபு, சிம்ரன், த்ரிஷா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அனிருத் இசையமைத்துள்ள இப்படம் ஜனவரி 10ம் தேதி ரிலீஸாகும் என்று அதிகாரப் பூர்வமாக அறிவித்தார்கள். ஆனால் விஸ்வாசம் பொங்கல் ரிலீஸ் என்று கூறிவிட்டு தேதியை அறிவிக்காமல் இருந்தார்கள்.

இந்நிலையில், பேட்ட படத்துடன் இணைந்து தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் படம் ஜனவரி 10ம் தேதி வெளியாகவுள்ளது. வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் 4 ஆவது முறையாக இணைந்து தல அஜித் இப்படத்தில் நடித்துள்ளார். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, யோகி பாபு, ரோபோ ஷங்கர், தம்பி ராமையா ஆகியோர் நடித்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திருக்கு டி.இமான் இப்படத்திற்கு இசையமைள்ளார்.

அண்மையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கொடுத்தது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கடந்தாண்டு அஜித் நடிப்பில் எந்த படமும் வெளியாகாததால், இப்படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஆனால், விஸ்வாசமும், பேட்ட படமும் ஒரே நேரத்தில் திரைக்கு வருவதால், அதிக திரையரங்கம் கிடைப்பதிலும், பாக்ஸ் ஆபிஸ் வசூல் கொடுப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பேட்ட படத்துக்கு முன்னதாகவே விஸ்வாசம் படத்தை திரையிட அனுமதிக்காக காத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விஸ்வாசம் படத்தை, ஜனவரி 10ம் தேதி அதிகாலை 1 மணிக்கு திரையிட அனுமதி கேட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்பின் பேட்ட படம் வழக்கம் போல அதிகாலை 4 மணிக்கு முதல் காட்சி வெளியிடப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.