ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் – காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகும் இந்தியன் 2 படத்தின் தயாரிப்பு தரப்பு பிரச்சனையால், படத்திற்கு சிக்கல் வந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

கமல்ஹாஸன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான இந்தியன் படத்தின் 2ம் பாகத்தை இயக்கி வருகிறார் ஷங்கர். இப்படத்தை லைகா தயாரிக்கிறது. கமல் ஹாஸன் லோக்சபா தேர்தலில் கவனம் செலுத்த வசதியாக தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு படப்பிடிப்பை துவங்குமாறு கமல்ஹாஸன் ஷங்கரிடம் கூறியிருந்தார். இதையடுத்து படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் படப்பிடிப்பை மீண்டும் துவங்குவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்தியன் 2 படத்தை தயாரிக்க முடியாது என்று கூறி லைகா நிறுவனம் தெரிவித்துவிட்டதாக பேச்சு கிளம்பியுள்ளது. ஆனால் லைகா மற்றும் கமல் ஹாஸனை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி படத்தை எடுக்கப் பார்க்கிறாராம் ஷங்கர்.

லைகாவுடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் வேறு தயாரிப்பு நிறுவனத்தை அணுக முடிவு செய்துள்ளாராம் ஷங்கர். இந்தியன் 2 பட பட்ஜெட் எகிறுவதால் லைகா நிறுவனம் படத்தில் இருந்து வெளியேறுவதாகவும், படம் கைவிடப்படுவதாகவும் முன்பு தகவல் வெளியானது. ஆனால் படம் கைவிடப்படவில்லை என்று படக்குழு தரப்பில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இப்பிரச்சனையை ஷங்கர் நிச்சயம் பிரச்சனையை தீர்த்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.